கமல் கொடுத்த கிஸ், கால் காசுக்கு பிரயோசனமில்ல : நடிகை புலம்பல்

மல் படத்தின் ஒரு நடிகை கமிட்டானால் அவரிடம் கிஸ் பற்றி நிருபர்கள் கேட்காமல் விடுவதில்லை. அப்படித்தான் விஸ்வரூபம் படத்தில் நடித்த பூஜாகுமாரிடம் நிருபர்கள் கிஸ் கேள்வியைக் கேட்டார்கள்.

அவரோ அதற்கு கொஞ்சமும் வஞ்சகமில்லா அமெரிக்காவிலிருந்து வந்தவராயிற்றே… அதெல்லாம் காட்சிக்கு தேவையென்றால் கொடுக்கலாம் என்று சமாளித்தார்.

ஆனால் அந்தப் படத்தில் கமல் முத்தம் பூஜாகுமாருக்கு தேவைப்படவில்லை என்றாலும் சமீபத்தில் ரிலீசான ‘தூங்காவனம்’ படத்தில் கமலிடம் முத்தத்தை வாங்கியிருக்கிறார் மதுஷாலினி.

”உங்ககிட்ட சொல்லிக்காம கிஸ் பண்ணிட்டேன்” என்பார் கமல். அதற்கு மதுஷாலினி ”பரவாயில்லை நீங்க ஏதோ ஒரு பிரச்சனையில மாட்டிக்கிட்டு இருக்கிற மாதிரி தெரிஞ்சது. அதனால தான் நான் ஒன்னும் சொல்லல” என்று கூலாகச் சொல்வார். அதற்கு முந்தைய காட்சியில் தான் தனது பாய்ப்ரெண்ட் முத்தம் கேட்டு அவரை அணுகும் போது கத்தி கூப்பாடு போட்டுக் கொண்டிருப்பார்.

அடுத்த காட்சியில் நோகாமல் மதுஷாலினியை முத்தம் கொடுத்துக் கொண்டே வில்லன் கோஷ்டியிடமிருந்து மறைவார். மறைவதற்கு எத்தனையோ இடங்கள் ஹோட்டலில் இருக்கும் போது கூட்டத்துக்குள்ளேயே மதுஷாலினிக்கு முத்தம் கொடுத்து மறைவார் கமல்.

இந்தக் காட்சிக்கு முதலில் ஓ.கே சொன்ன மதுஷாலினி ‘தூங்காவனம்’ படத்துக்குப் பிறகு தமிழில் ஒரு ரவுண்டு வரலாம். அதற்கு கமலின் கிஸ் செண்டிமெண்ட் கை கொடுக்கும் என்று நம்பிக்கொண்டிருந்தார்.

ஆனால் இதுவரை ஒரு புதுப்படம் கூட தமிழில் அவருக்கு கமிட்டாகவில்லையாம்.

கமல்கிட்ட கிஸ் வாங்கினதுல கால்காசுக்குக் கூட பிரயோஜனமில்லை என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்.

குருதிப்புனலில் கமலிடம் முத்தம் வாங்கிய பிறகு கௌதமிக்கு இரண்டு தமிழ்ப் படங்கள்தான் கிடைத்தன. அதேபோல்தான் விருமாண்டி படத்தில் அபிராமிக்கு முத்தம் கொடுத்தார் கமல். அதோடு ஒரு சில படங்களோடு காணாமல் போனவரை அடுத்து பல வருடங்கள் கழித்து புதுயுகம் சேனலில் ஒரு தொகுப்பாளராகத்தான் பார்க்க முடிந்தது.

இப்படி ஒரு செண்டிமெண்ட் இருக்குன்னு இந்தப் பொண்ணுக்கு தெரியாமப் போச்சே…?

Kamal HaasanMadhu Shalini
Comments (0)
Add Comment