அமெரிக்காவில் நடந்த மாற்றம்! : சபாஷ் நாயுடு இயக்குநர் ஆனார் கமல்!

‘தசாவதாரம்’ படத்தில் ரசிகர்களிடையே பிரபலமான காமெடி கேரக்டர் ‘நாயுடு’வை ‘சபாஷ் நாயுடு’வாக்கி நடிக்கத் தொடங்கி விட்டார் கமல்ஹாசன்.

பேர் தான் லோக்கலே தவிர படப்பிடிப்பு அமெரிக்கா வரை சென்றிருக்கிறது. முதற்கட்ட படப்பிடிப்பே அங்குள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆரம்பமானது.

ஸ்ருதியும் இதில் நடிப்பதால் அவர் சம்பந்தப்பட்ட பாடல் காட்சியோடு படப்பிடிப்பை தொடங்கினார் இப்படத்தை இயக்கும் மலையாள இயக்குநர் டி.ஜே.ராஜீவ்குமார்.

அவர் நேரமோ தெரியவில்லை. திடீரென்று அவருக்கு அங்கு உடல்நலக்குறைவு ஏற்பட அதிர்ச்சியடைந்து விட்டது படக்குழு.

நொடிக்கு நொடி பல லட்சம் ரூபாய் செலவு பிடிக்கும் என்பதால் யூனிட் கையைப் பிசைந்து கொண்டு நிற்க, நல்லவேளையாக நானிருக்கேன் என்று முன் வந்திருக்கிறார் கமல்.

திட்டமிட்டப்படி படப்பிடிப்பு நடக்கட்டும் அதை நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் ஓய்வெடுத்து விட்டு வாருங்கள் என்று இயக்குநர் டி.கே.ராஜூவ்குமாரை வீட்டுக்கு அனுப்பி விட்டு ‘சபாஷ் நாயுடு’ படத்தின் திடீர் இயக்குநராகி விட்டார் கமல்.

கமல் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் என்றால் அதில் அவருடைய ‘கைங்கர்யம்’ அதிகமாக இருக்கும். அப்படி ஒரு நிலை ‘சபாஷ் நாயுடு’வுக்கும் ஏற்பட்டிருக்கிறது.

‘நாயுடு’ எப்படி வரப்போறாரோ..?

Kamal Hassan‪‎Sabash Naidu‬Shruti Haasanகமல்ஹாசன்சபாஷ் நாயுடுஸ்ருதிஹாசன்
Comments (0)
Add Comment