நானும் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறி விடுவேன்! : விஜய் டிவியை கதற விட்ட கமல்

வெளியில் தனக்கு இவ்வளவு ஆதரவு இருக்கிறதா? என்கிற உண்மை தெரியாமலேயே ஆரவ் மீதான காதல் விவகாரத்தில் அப்செட்டாகி பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறி விட்டார் ஓவியா. அவரை மீண்டும் வீட்டுக்குள் அழைத்து வர விஜய் டிவி முயற்சி மேற்கொண்டிருக்கிறது.

இந்த களேபரத்துக்கிடையே விஜய் டிவிக்கும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனுக்கும் கடந்த சில தினங்களாகவே மோதல் வெடிக்க ஆரம்பித்திருக்கிறது.

ஏற்கனவே காயத்ரி பேசிய ‘சேரி பிஹேவியர்’ வார்த்தை விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியதில் கமல் ரொம்பவே அப்செட்டாகக் காணப்பட்டார். அதனால் விஜய் டிவியிடம் வாங்கிய 15 கோடியைக் காப்பாற்றிக் கொள்ள மீடியாக்களை தானே கூப்பிட்டு பிக்பாஸ் நிகழ்ச்சியின் அவசியம் குறித்து விரிவாகப் பேசி அனுப்பினார்.

இருந்தாலும் அந்த நிகழ்ச்சிக்கு எந்தளவுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு இருக்கிறதோ? அதே அளவுக்கு நிகழ்ச்சியைத் தடை செய்ய வேண்டும் என்று எதிர்ப்புக் குரல்களும் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கிறது.

பரணி சுவற்றில் ஏறி குதிக்க முயற்சித்தது, ஓவியா நீச்சல் குளத்தில் இறங்கி தற்கொலைக்கு முயன்றது என வாராவாரம் ஏதாவது ஒரு பிரச்சனை முளைத்துக் கொண்டே இருப்பதால் அதை சமாளிப்பதே கமலுக்கு பெரும்பாடாக இருக்கிறது. இந்த லட்சணத்தில் விஜய் டிவி தனிப்பட்ட முறையில் போடுகிற கண்டிஷன்கள் கமலுக்கு கூடுதல் எரிச்சலைக் கொடுத்திருக்கிறதாம்.

குறிப்பாக நிகழ்ச்சியின் ஒவ்வொரு 10 நிமிட இடைவேளையின் போதும் நிகழ்ச்சிக்கு ஆதரவு தரும் ‘விவோ மொபைல்ஸ்’ உள்ளிட்ட விளம்பரதாரர்களின் பெயர்களை உச்சரிக்க வேண்டும் என்று கட்டளை இட்டதாம் விஜய் டிவி. ஆனால் கமலோ அது மட்டும் முடியவே முடியாது என்று திட்டவட்டமாக மறுத்து விட்டாராம்.

ஒவ்வொரு பத்து நிமிட இடைவேளையின் போதும் சொல்ல வேண்டும் என்பதெல்லாம் டூமச். வேண்டுமென்றால் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் போதும், முடியும் போதும் ‘விவோ வி5 வழங்கும் பிக்பாஸ்’ என்று சொல்கிறேன். அதையும் மீறி 10 நிமிடங்களுக்கு ஒரு தடவை சொல்லியே ஆக வேண்டும் என்று என்னை கட்டாயப்படுத்தினால் இந்த நிகழ்ச்சியை விட்டே நான் வெளியேறி விடுவேன் என்று சொல்லி விஜய் டிவியை கதற விட்டிருக்கிறார்.

கமிட் செய்து விட்டோம்; வேறு என்ன செய்வது? என்று விஜய் டிவியும் ”சரி அதையாவது மறக்காமல் சொல்லுங்கள்” என்று இறங்கிப் போயிருக்கிறது.

Bigg Bossbigg boss tamilJulie Vivo Bigg BosskamalKamal HaasanOviyaVijay Tv
Comments (0)
Add Comment