9 அடி நீள முதலையுடன் மோதப்போகும் நான்கு ஹீரோயின்கள்!

த்ரிஷா வைத்து ‘கர்ஜனை’ திரைப்படத்தை முடிந்த கையோடு ‘கன்னித்தீவு’ என்ற படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் சுந்தர் பாலு.

கிருத்திகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இதில் வரலட்சுமி, சுபிக்‌ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி, மொட்டை ராஜேந்திரன், சூப்பர் சுப்பராயன், சர்மிளா ஆகியோர் நடித்து வருகிறார்கள்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு கேரள மாநிலத்தில் நடைபெற உள்ளது. மிகப்பிரமாண்டமான லேக்கில் 9 அடி நீளமான முதலையுடன் வரலட்சுமி, சுபிக்‌ஷா, ஐஸ்வர்யா தத்தா, ஆஷ்னா சவேரி ஆகிய நான்கு கதாநாயகிகளுடன் மொட்டை ராஜேந்திரன் இணைந்து முதலையுடன் மோதுகின்றனர்.

இந்திய சினிமாவில் இதுவரை கண்டிராத வகையில் உருவாகும் முதலையுடன் சண்டை காட்சி, படத்தின் பிற்பகுதியில் வரும் என்று இயக்குனர் சுந்தர் பாலு தெரிவித்துள்ளார். இந்த சண்டை காட்சியை ஸ்டண்ட் சிவா எடுத்து வருகிறார்.

அரோல் குரோலி இசையமைக்கும் இப்படத்திற்கு சிட்டிபாபு ஒளிப்பதிவு செய்கிறார் லாரன்ஸ் கிஷோர் எடிட்டிங் செய்கிறார்.

Aishwarya DuttaAshna ZaveriKanni TheevuMovie NewsSubhikshaVaralaxmi Sarathkumar
Comments (0)
Add Comment