மேடையை அலங்கரித்த கன்னிமாடம் இயக்குநர்


நடிகர் போஸ் வெங்கட் தொலைக்காட்சி தொடர்களில் அறிமுகமாகி தமிழ் சினிமாவில் வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து வருபவர். தற்போது முதல் முறையாக வெள்ளித்திரையில் இயக்குநராக அறிமுகமாகிறார். புதுமுகங்கள் நடிப்பில் “கன்னி மாடம்” எனும் படத்தை இயக்கியுள்ளார். சில நாட்கள் முன் வெளியான இப்படத்தின் டிரெய்லர் நல்ல வரவேற்பைப் பெற்றது.

படத்தின் வெளியீட்டு வேலைகள் நடந்து வரும் சூழலில் சமீபத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட விஜய்சேதுபதி, விக்ரமன் உள்ளிட்ட அனைத்து பிரபலங்களும் கன்னிமாடம் படம் வெற்றியடைய வாழ்த்தினார்கள். ஒவ்வொரு சிறப்பு விருந்தினர்களையும் மற்றும் படத்தில் பங்காற்றியவர்களையும் மிக அழகாக அறிமுகப்படுத்தினார் போஸ்வெங்கட். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதும் அவரே!

bossvenketKannimadamKannimadam audiolaunch
Comments (0)
Add Comment