ஸ்ரீ ஐயப்பனின் சர்வசக்தி மகிமையைச் சொல்ல வரும் ”கன்னிசாமி”!

ஸ்ரீ ஐயப்பனின் சர்வசக்தி மகிமையை விளக்குகின்ற வகையில் ‘கன்னிசாமி’ படத்தை தயாரித்து வருகிறது ஏ.ஜாகீர் உசேனின் ரோஷன் மூவி கிரியேஷன்ஸ் நிறுவனம். மலேசிய கவிமாறன் தயாரித்த ‘குருசாமி, அபூர்வ மகான்’ ஆகிய படங்களை இயக்கிய கே.ஆர். மணிமுத்து இப்படத்தை இயக்குகிறார்.

சரவணன், அர்ச்சனாசிங், சத்யபிரகாஷ், ‘அவன் இவன்’ ராமராஜன், மாஸ்டர் யோகேஸ்வரன், திருச்சி ஜெகதீசன், கிங்காங், போண்டாமணி, மற்றும் பலர் நடித்து வருகிறார்கள்.

சரவணன் ஒரு மேடைப் பாடகர். இவரது குரலுக்கு மயங்கி காதலித்து திருமணம் செய்து கொண்டவர் அர்ச்சனா சிங். இவர் மீது ஒரு தலைக் காதல் கொண்டவர் சத்ய பிரகாஷ். இவர் காதலித்துக் கொண்டிருக்கும் போதே அர்ச்சனாசிங் இவரது காதலை ஏற்றுக் கொள்ளாமல் சரவணனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த சத்யபிரகாஷ் ஏதேதோ சதி வேலைகள் செய்து அவர்களை பிரிக்க முயற்சிக்கிறார்.

மேடையில் பாடும் சரவணனுக்கு பல பெண்களுடன் தொடர்பு இருக்கிறது. இவரது குரலுக்கு மயங்கி பல பெண்கள் மேடையிலேயே அவருக்கு முத்தமிடுகிறார்கள். அதை அவர் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு அவர்களுடன் ஆனந்தமாக ஆடிப்பாடிக் கொண்டிருக்கிறார், உங்களுக்கு துரோகம் செய்கிறார். அவரை விட்டு வெளியே வந்து விடுங்கள் என்றெல்லாம் எடுத்துச் சொல்லி இருவரையும் பிரித்து விடுகிறார் சத்யபிரகாஷ்.

பிரித்தது மட்டுமில்லாமல் வீட்டில் தனியாக இருக்கும் அர்ச்சனா சிங்கை பலாத்காரமாக அடைவதற்கு வீட்டிற்கே சென்று முயற்சி செய்கிறார். இந்த விஷயத்தை எல்லாம் சரவணனின் நண்பர்கள் அவருக்கு விபரமாக எடுத்துச் சொல்கிறார்கள். சரவணனும் தனது மனைவியை எப்படியாவது அந்த மூர்க்கனிடமிருந்து காப்பாற்ற வேண்டுமென்று துடிக்கிறார். வீட்டைநோக்கி ஓடுகிறார்.

இறுதியில் நடந்தது என்ன? சத்யபிரகாஷ் தனது விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்டாரா? சரவணன் முர்க்கனிடமிருந்து தனது மனைவியைக் காப்பாற்றினாரா? என்பதை சொல்லும் பக்திக் காவியமாக நவம்பர் மாதம் வெளிவருகிறது ‘கன்னிசாமி’

கேரளா, சபரிமலை, எரிமேலி, ஆவுடையார் கோயில், அறந்தாங்கி போன்ற பகுதிகளில் இப்படத்தை படமாக்கியிருக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – நவ்ஷத், கதை, வசனம் – கே.ஆர். வேலாயுதம், இசை – கண்மணிராஜா, பாடல்கள் – அண்ணாமலை, தமிழ்அமுதன், ஏம்பல்ராஜா, வைரமூர்த்தி, நடனம் – பவர் சிவா
மக்கள் தொடர்பு – பெருதுளசி பழனிவேல், தயாரிப்பு – ஏ. ஜாகீர் உசேன், இயக்கம் – கே.ஆர். மணிமுத்து

KannisamyKannisamy Movie NewsSaravanan
Comments (0)
Add Comment