காந்தாரா- விமர்சனம்

கன்னடத்தில் இருந்து மேலும் ஓர் வெற்றி வரவு காந்தாரா திரைப்படம்.

KGF கொடுத்த எனர்ஜி குறையாமல் ஒருபடம் கொடுக்க வேண்டும் என முடிவெடுத்து களம் கண்டுள்ளார் இயக்குநர்+ ஹீரோ ரிசாப் ஷெட்டி

நிம்மதி தேடி ஓர் இடத்திற்குச் செல்லும் அரசர் அவ்விடத்தில் வாழும் மக்களின் கலாச்சாரத்தால் கவரப்படுகிறார். மேலும் அங்குள்ள மக்கள் வழிபடும் ஒரு சிலையை அரசர் கேட்கிறார். அதைப்பெறுவதற்கு அரசருக்கு ஒரு நிபந்தனை வைக்கப்படுகிறது. அங்குள்ள மக்களுக்கு அரசர் கொஞ்சம் நிலங்களை தரவேண்டும் என்பதே அந்த நிபந்தனை. சம்மதம் சொல்லி அரசர் நிலம் கொடுக்கிறார்..காலம் சில செல்ல அரசரின் வாரிசுகள் வந்து அந்த நிலங்களை கையகப்படுத்த முனைகிறார்கள். அம்மக்களின் நாயகன் ரிஷாப் ஷெட்டி அதை எப்படி வெற்றிகரமாக தடுக்கிறார் என்பதே படத்தின் கதை

நாயகன் ரிஷாப் ஷெட்டி தான் வார்த்த கேரக்டருக்கு சிறப்பாக உயிர் கொடுத்துள்ளார். இந்தக்கதைக்கு இவர் தான் சரியான சாய்ஸ் என்று சொல்லுமளவில் நடிப்பில் மிரட்டியிருக்கிறார். வில்லனாக அச்யுத் தெறிரகம். தனது கேரக்டரை ஆழமாக உள்வாங்கி நடித்துள்ளார் அச்யுத். வன அதிகாரியாக வரும் கிஷோர் கேரக்டரும் சரி அவர் நடிப்பும் சரி காந்தாராவிற்கு எக்ஸ்ட்ரா பூஸ்டர். நாயகிக்குத் தான் படத்தில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஒன்றுமில்லை.

பழமையான விசயங்களை படத்தில் காட்டும் போது, அப்போதிருந்த இசையை பின்னணியில் ஒலிக்க விட வேண்டியது முக்கியம். அதை உணர்ந்து இசை அமைப்பாளர் உழைத்துள்ளார். ஒளிப்பதிவாளரும் காட்சிகளை பிரமாதப்படுத்தியுள்ளார். ஆர்ட் டைரக்டர் அந்தக் காலங்களை கண்முன் நிறுத்தியிருக்கிறார்.

எமோஷ்னல் மற்றும் கமர்சியல் பேக்கேஜில் முன்பாதியில் தடதடக்கும் படம் பின்பாதியில் சற்றே சோர்வடைய வைக்கிறது. ஆனாலும் உரிமைக்காக குரலேந்தும் அவதார நாயகர்களை நாம் கொண்டாடியே ஆகவேண்டும். அந்த வகையில் காந்தாரா காத்திரம்.

3.5/5

#Kantara #காந்தாரா

Actor Rishab ShettyActress Sapthami GowdaKantara movie