இயக்குநர் ரத்னகுமார் படம் என்றால் சற்று வித்தியாசம் இருக்கும். இந்த 29-ல் இருக்கிறதா?
சேலத்திலிருந்து தனக்கான அடையாளத்தைத் தேடி சென்னை வருகிறார் ஹீரோ விது. சென்னையில் கிடைத்த வேலையைச் செய்து நண்பர்களோடு வாழ்ந்து வருகிறார். அவருக்குள் ஒரு தேடல் இருந்துகொண்டே இருக்கிறது. இச்சூழலில் நாயகி ப்ரீத்தி அஸ்ராணி விது வேலைசெய்யும் இடத்திற்கே வருகிறார். அதன்பின் இருவரும் நண்பர்களாகி பின் காதலர்களாக மாறுகிறார்கள். அந்தக் காதலில் சில கான்ட்ரவசி நடக்க, அதன் முடிவு என்ன என்பதே படத்தின் மீதிக்கதை
விது ஒரு ஹீரோவாக இன்னும் கடின உழைப்பைப் போட வேண்டும். நிறைய காட்சிகளில் தடுமாறுகிறார். சீரான பயிற்சியை மேற்கொண்டால் நல்ல நடிகராக வலம் வருவார். ப்ரீத்தி அஸ்ராணி படத்தை மொத்தமாக தன் முகத்திலே தூக்கிச் சுமந்துள்ளார். ஒவ்வொரு காட்சியிலும் மனிதி அசத்தியுள்ளார். விது நண்பராக அபினாஷ் நல்ல சைட் கிக்கராக படத்திற்கு உதவியுள்ளார். மேலும் படத்தில் வரும் பல கேரக்டர்கள் கொடுத்த வேலையைச் செய்துள்ளனர்
ஷான் ரோல்டன் தரமான இசையை வழங்கியுள்ளார். பாடல் வரிகளை சிறப்பாக எழுதியுள்ள உமாதேவி, மோகன்ராஜன் உள்பட பாடலாசிரியர்கள் யாவரும் பாராட்டுக்குரியவர்கள். மாதேஸ் மாணிக்கத்தின் சினிமாட்டோகிராபி படத்திற்கு பெரும்பலம். இன்றைய முதல்வர் விஜய் இளைய தளபதியாக இருந்த காலத்தில் நடக்கும் கதை. அதற்கேற்றாப்போல் லைட்டிங் செட் செய்து அழகாக ஒளிப்பதிவு செய்துள்ளார் மாதேஸ் மாணிக்கம்
29 வயது இளைஞனின் உளவியல் பயணத்தை அழகான காட்சிகள் மூலமாக இயக்குநர் ரத்னகுமார் படமாக்கியிருந்தாலும், நிறைய பழைய வாசனையை படமெங்கும் நுகரமுடிவது மைனஸ்! படத்தின் நீளத்தைக் குறைத்து திரைக்கதையில் இன்னும் ஆழத்தைச் சேர்ந்திருந்தால் 29-ஐ நாமும் கொண்டாடியிருக்கலாம்
2.5/5