கார்த்தியோட மீசைக்கு ஆப்பு : இது மணிரத்னத்தோட ஸ்டைலுங்க…!

கொம்பனின் கம்பீரமான வெற்றிக்கு அதில் ஹீரோவாக நடித்த கார்த்தியின் லுக்கும் ஒரு முக்கிய காரணம்.

பெரிய மீசையை முறுக்கி விட்டுக்கொண்டு, கையிலை அரைக்கால் அளவுக்கு தூக்கி மடித்து வைத்துக் கொண்டு அவர் நடந்து வரும் கம்பீரமே படத்தைப்பற்றி ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேச வைத்தது.

அந்தளவுக்கு கார்த்தியின் கெத்தை ஒருபடி அதிகப்படுத்திக் காட்டுவதாக இருந்தது அவருடைய மீசை.

அப்பேர்ப்பட்ட மீசைக்கு ஆப்பு வைத்து விட்டாராம் மணிரத்னம்.

ஆமாம், கார்த்தி இப்போது மணிரத்னம் இயக்கத்தில் காற்றி வெளியிடை படத்தில் நடித்து வருகிறார்.

எப்போதுமே தன் பட ஹீரோக்களை மீசையில்லாமல் இளமையான லுக்கில் காட்டும் மணிரத்னம் கார்த்தியையும் மீசையை எடுக்கச் சொல்லி கெட்டப்பை மாற்றுகிறார்.

முன்னதாக இந்தப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் மீசையோடு தான் காட்சி தந்திருந்தார் கார்த்தி. ஆனால் படத்தின் பெரும்பாலான காட்சிகளில் மீசையில்லாத கார்த்தியைத்தான் ரசிகர்கள் பார்க்க முடியுமாம்.

Kaatru VeliyidaiKarthiMani Ratnam
Comments (0)
Add Comment