கணவரைப் பற்றி விமர்சனம் – ரசிகரை மிரள வைத்த கஸ்தூரி!

டந்த சில மாதங்களாகவே திடீர் விமர்சகராக மீடியாக்களில் தலை காட்டி வருகிறார் மாஜி நடிகை கஸ்தூரி.

தன் மனதில் தோன்றும் பொதுவான கருத்துகள் எதுவாக இருந்தாலும் அதை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு அடிக்கடி சர்ச்சையில் சிக்குவார்.

இருந்தாலும் எதிர் விமர்சனங்களுக்கு பதில் கொடுப்பவர் மீண்டும் மீண்டும் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையாகி விட்டது.

அப்படித்தான் சமீபத்தில் ‘இளையராஜா 75’ நிகழ்ச்சியின் தொகுப்பாளராக பங்கேற்ற கஸ்தூரி. அங்கு எடுத்த ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ‘சன் டிவியில் வரும் இந்த தொகுப்பாளனி எனக்கு மிகவும் பிடிக்கும்’ என்று கூறியிருந்தார்.

கஸ்தூரியின் இந்த புகைப்படத்துக்கு பலரும் பல்வேறு விதமான கமெண்ட்களை பதிவிட, ஒருவர் மட்டும் “வயசானாலும் உன் அழகு மிரட்டுது முடியல, உன் ஹஸ்பண்ட் என்ன பண்றார்’ என்று கமெண்ட் அடித்திருக்கிறார்.

அந்த கமெண்ட்டை ரீ ட்வீட் செய்த கஸ்தூரி “என்ன பண்றார்” என்று ஸ்மைலியுடன் பதில் கொடுத்திருக்கிறார். கஸ்தூரியின் அந்தப் பதிலைப் பார்த்த பலரும் கஸ்தூரி ”இரட்டை அர்த்தத்தில் பேசுகிறார்” என்று அவரை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

அடக்குனா அடங்குறா ஆளா கஸ்தூரி?

Actress KasthuriKasthuriSocial Media
Comments (0)
Add Comment