ந்ந்தா கெளம்பிட்டார்ல… : மீண்டும் காமெடி கேரக்டரில் நடிக்க ஆரம்பித்தார் வடிவேலு!

சோலோ ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து அதை ஹிட்டாக்கி விட்டுத்தான் மற்ற ஹீரோக்களின் படங்களில் காமெடி கேரக்டரில் நடிப்பேன் என்று பிடிவாதமாக இருந்தார் வைகைப்புயல் வடிவேலு.

இதனாலேயே பல முன்னணி ஹீரோக்களின் பட வாய்ப்புகளும் சூரி உள்ளிட்ட மற்ற காமெடி நடிகர்களுக்கு போய் விட்டது.

சரி ஹீரோவாக நடித்த எலி படமும் ஹிட்டானதா என்றால் அதுவும் இல்லை.

இதற்கு மேலும் இதே பிடிவாதத்தோடு இருப்பது சரியல்ல என்று முடிவுக்கு வந்தவர் தனது சோலோ ஹீரோ ஆசைக்கு குட்பை சொல்லி விட்டு மற்ற ஹீரோக்களின் படங்களில் காமெடி கேரக்டரில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம்பிரபு நடிக்கும் ”வீர சிவாஜி” படத்தை அதிக பொருட்செலவில் தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

விரைவில் வெளியாக இருக்கும் இந்த படத்தை தொடர்ந்து விஷால் நடிக்கும் மிகப்பிரமாண்டமான படமாக ”கத்தி சண்டை” படத்தையும் தயாரிக்கிறார்.

இதில் தான்நகைச்சுவை கேரக்டரில் நடிக்கிறார் வடிவேலு. விஷால் வடிவேலு ஏற்கனவே ‘திமிரு’ படத்தில் இணைந்து நடித்து அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. இயக்குனர் சுராஜ், வடிவேலு கூட்டணியில் தலைநகரம், மருதமலை இரண்டு படங்களுமே அமோக வெற்றி பெற்றுள்ளது. இந்த படத்தின் மூலம் விஷால், வடிவேலு, சுராஜ் மூவரும் கூட்டணி சேர்கிறார்கள்.

கதாநாயகியாக நடிக்கும் அதிஷ்டம் யாருக்கு என்று தெரியவில்லை. மற்ற நட்சத்திரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

அதிரடிக்கும், நகைச்சுவைக்கும் முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் கத்திசண்டை படத்தை சுராஜ் இயக்குகிறார். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் இயக்குனர் சுராஜ் இந்த படத்தை பக்கா கமர்ஷியல் மற்றும் காமெடி படமாக உருவாக்குகிறார்.

இந்த ‘கத்தி சண்டை’ படத்தை விஷால், வடிவேலு, சுராஜ் மூவரும் இணைந்து பக்கா கமர்ஷியல், காமெடியாக உருவாக்குகிறார்கள்.
எஸ்.நந்தகோபால் தயாரிக்கும் கத்திசண்டை படத்தின் படிப்பிடிப்பு இம்மாதம் துவங்கி தொடர்ந்து நடைபெற உள்ளது.

Kathi Sandaivadiveluvishalகத்தி சண்டைவடிவேலுவிஷால்
Comments (0)
Add Comment