இசையில் பட்டைய கிளப்பும் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர்!

‘கே ஜி எஃப்’, ‘மார்கோ’, மற்றும் ‘டாக்ஸிக்’ போன்ற படங்கள் மூலம் தென்னிந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியவர் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர். கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் ஷெரீப் முகமது தயாரிப்பில் பிரம்மாண்டமான ஆக்சன் திரில்லர் திரைப்படமான ‘காட்டாளன்’ படத்திற்கு இசையமைக்க இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன் பி. அஜனீஸ் லோகநாத் இசையமைப்பார் என செய்திகள் வெளியாகி இருந்த நிலையில்… தற்போது ரவி பஸ்ரூர் இசையமைப்பார் என அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

பான் இந்திய வெளியீடாக வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இந்தப் படம் மே மாதம் 14 ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மலையாள திரை உலக வரலாற்றிலேயே மிகப்பெரிய வெளியீடுகளில் ஒன்றாக இப்படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் பால் ஜார்ஜ் இயக்குகிறார். பான் இந்திய அளவில் மாபெரும் வெற்றி பெற்ற ‘மார்கோ’ படத்திற்குப் பிறகு கியூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கும் அடுத்த திரைப்படம் இதுவாகும். இந்த படத்தில் ஆண்டனி வர்கீஸ் கதாநாயகனாக நடிக்க அவருடன் ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இணைந்துள்ளது.

காட்டாளன் திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

Kattalan movieRavi basrur