‘டாடா’ படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, தயாரிப்பாளர் எஸ் அம்பேத் குமாரின் ஒலிம்பியா பிக்சர்ஸின் சமீபத்திய வெளியீடான ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தில் அருள்நிதி மற்றும் துஷாரா விஜயன் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்க சை கௌதம ராஜ் இயக்கியுள்ளார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் தமிழ்நாட்டில் 310 திரையரங்குகளில் இந்தத் திரைப்படம் பிரம்மாண்டமாக வெளியானது. இந்த வெற்றியைக் குறிக்கும் வகையில், ஒட்டுமொத்த அணியினரும் கேக் வெட்டி தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
‘கழுவேத்தி மூர்க்கன்’ திரைப்படத்தில் அருள்நிதி மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் சந்தோஷ் பிரதாப், சாயாதேவி, முனிஷ்காந்த், சரத்லோகித் சாவா, ராஜ சிம்மன், யார் கண்ணன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.’கழுவேத்தி மூர்க்கன்’ படத்தை சை கௌதம ராஜ் (ஜோதிகாவின் ‘ராட்சசி’ புகழ்) எழுதி இயக்கியுள்ளார் மற்றும் ஒலிம்பியா பிக்சர்ஸ் எஸ். அம்பேத் குமார் தயாரித்துள்ளார்.
#KazhuvethiMoorkan