மூன்றாவது படமே விஜய்யுடன் ஜோடி சேரும் வாய்ப்பு கிடைத்தால் யார் தான் அந்த வாய்ப்பை தவற விடுவார்கள்.
‘ரஜினி முருகன்’ ஹிட்டானது சந்தோஷத்தில் திளைத்திருந்த கீர்த்திக்கு கூடுதல் சந்தோஷ செய்தியாக வந்த விஜய்யின் 60-வது பட வாய்ப்பு.
கதையைக் கூட கேட்காமல் எத்தனை நாட்களுக்கு கால்ஷூட் வேண்டுமோ அத்தனை நாட்களுக்கு எடுத்துக் கொள்ளுங்கள் என்று தாராளம் காட்டி பட வாய்ப்பை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்.
விஜய்யுடன் ஜோடி சேர்ந்த ராசியோ என்னவோ? அடுத்தடுத்து புதுப்பட வாய்ப்புகள் தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் கூட தேடி வர ஆரம்பித்திருக்கிறது.
இந்த நேரத்தில் தான் முன்னணி ஹீரோக்களை தெறிக்க விட ஆரம்பித்திருக்கிறார் கீர்த்தி சுரேஷ்.
தனுஷுடன் நடித்த தொடரி விரைவில் ரிலீசாக உள்ள நிலையில் இப்போதைக்கு சிவகார்த்திகேயனுடன் ரெமோ விஜய்யின் 60 வது படம் இந்த இரண்டு படங்களுக்கு மட்டுமே கால்ஷூட் கொடுத்திருக்கிறார்.
இந்த நிலையில் தெலுங்கில் அவர் ஏற்கனவே நடித்து முடித்த படம் ஒன்றுக்கு பேட்ச் ஒர்க்குக்காக கீர்த்தியை கூப்பிட, அதற்கு அவர் சொன்ன பதிலைக் கேட்டு அதிர்ச்சியடைந்து விட்டார்களாம்.
என்ன சொன்னார் கீர்த்தி?
இப்போதைக்கு விஜய் படத்துக்கு தான் நான் முதலிடம் கொடுத்திருக்கிறேன். அந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகு தான் மற்ற படங்களுக்கு கால்ஷீட் கொடுப்பேன். அதனால் அது முடியும் வரை நீங்கள் காத்திருங்கள். முடியவில்லை என்றால் எனக்குப் பதிலாக யாராவது ஒருவரை டூப் போட்டு எடுத்து விடுங்கள் என்றாராம்.
பாவம் கீர்த்திக்காக காத்துக் கொண்டிருக்கிறாராம் அந்த அப்பாவி இயக்குநர்!