சம்பளத்தை மட்டுமா உயர்த்தினார் கீர்த்தி சுரேஷ்? : என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா…

ரு படம் ஹிட்டானால் நாயகனோ, நாயகியோ கொஞ்சம் கெத்து காட்டுவது வழக்கமானது தான். ஆனால் ‘ரஜினி முருகன்’ ஹிட்டானாலும் ஆனது கீர்த்தி சுரேஷ் காட்டும் கெத்தோ கொஞ்சத்தையும் தாண்டி எல்லையில்லாமல் போய்க்கொண்டிருக்கிறதாம்.

முதல் படமாக அமைந்த ‘இது என்ன மாயம்’ அட்டர் ப்ளாப் ஆனதில் பதறிப்போன கீர்த்தி சுரேஷ் சேப்டியாக தேடி வந்த தெலுங்குப் படங்களிலும் தலை காட்ட ஆரம்பித்தார். ஒருவேளை தமிழில் மார்க்கெட் சரிய ஆரம்பித்தால் தெலுங்கு படங்கள் கை கொடுக்குமே என்கிற நினைப்பு தான்.

நல்ல வேளையாக ‘ரஜினி முருகன்’ திரைப்படம் பிரம்மாண்ட வெற்றிப்படமாக அமைந்ததோடு மட்டுமில்லாமல், வசூலையும் வாரிக்குவித்து வருகிறது.

அந்த ஹிட் இப்போது விஜய்யின் 60-வது படத்திலும் அவருக்கு கதாநாயகி வாய்ப்பை பெற்றுத் தந்திருக்கிறது. மூன்றாவது படமே விஜய் ஜோடியாக கிடைத்து விட்டதால் சந்தோஷத்தில் திளைத்த கீர்த்தி சுரேஷ் தனது சம்பளத்தை ஒரு கோடியாக உயர்த்தி விட்டார் என்கிறார்கள்.

அதோடு மவுசு நின்றால் பரவாயில்லை. மீடியாக்களே அவரை நெருங்குவது பெரும்பாடாக இருக்கிறதாம்.

சமீபத்தில் ஒரு தினசரி பத்திரிகையின் நிருபர் கீர்த்தி சுரேஷின் பேட்டிக்காக தொடர்பு கொண்டபோது எந்த ரெஸ்பான்ஸும் தரவில்லையாம்.

பலமுறை அவருக்கு நினைவூட்டல் எஸ்.எஸ்.எஸ் அனுப்பியும் கண்டு கொள்ளாததால் கடுப்பான நிருபர் அவருடைய பேட்டியே தேவையில்லை என்று அவரது தொடர்பை துண்டித்து விட்டார். இதற்கும் அது ஒரு முன்னணி நாளிதழ் என்பது தான் ஆச்சரியம்.

‘ரஜினி முருகன்’ ரிலீசுக்கு முன்புவரை அடித்தவுடன் போனை எடுத்தவரின் இந்த திடீர் மனநிலை மாற்றத்துக்கு ஒரு யாரோ ஒரு சினிமாவுக்கு சம்பந்தமே இல்லாத ஒருவரை அவர் மேனேஜராக்கியிருப்பது தான் காரணம் என்கிறார்கள்.

என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேம்மா..?

Keerthi SureshRajini MuruganVijay 60கீர்த்தி சுரேஷ்ரஜினி முருகன்விஜய் 60
Comments (0)
Add Comment