அதிகாரம் மற்றும் நீதிக்கிடையிலான மோதலை மையமாகக் கொண்ட இந்த அதிரடி நீதிமன்றத் த்ரில்லர் திரைப்படம், செல்வாக்கும் சலுகைகளும் ஆளும் உலகில் உண்மையை எதிர்கொள்வதன் மூலம் நீதி எவ்வாறு கிடைக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது.
இப்படத்தை அஸ்வினி ஐயர் திவாரி இயக்குகிறார்.பம்மி பவேஜா, ஹர்மன் பவேஜா மற்றும் ஸ்மிதா பாலிகா ஆகியோர் Baweja Studios நிறுவனத்தின் கீழ் தயாரித்துள்ளனர். ஹர்மன் பவேஜா, அருண் சுகுமார், அஷ்வினி ஐயர் திவாரி, தஸ்னீம் லோகண்ட்வாலா மற்றும் அக்ஷத் கில்தியல் ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர்.
சோனாக்ஷி சின்ஹா, ஜோதிகா மற்றும் அஷுதோஷ் கோவாரிகரின் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், ப்ரீத்தி அகர்வால், ஆதிநாத் கோத்தாரே, ஆஷ்ரியா மிஷ்ரா, கவுரவ் பாண்டே மற்றும் சயந்தீப் குப்தா உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
“சிஸ்டம்” திரைப்படம் மே 22 முதல் இந்தியா உட்பட உலகம் முழுவதும் 240-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் ப்ரைம் வீடியோவில் பிரத்யேகமாக வெளியாகிறது.