7 மணிக்கு ஷூட்டிங்; 10 மணிக்கு எண்ட்ரி : கொஞ்சம் ஓவராத்தான் போறாராம் கீர்த்தி சுரேஷ்!

‘இது என்ன மாயம்’ படத்தின் மூலம் தமிழ்சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் வாரிசு நடிகையான கீர்த்தி சுரேஷ்.

அந்தப்படம் மிகப்பெரிய தோல்விப்படமாகி விட்டதில் அதோடு மூட்டையைக் கட்டிக்கொண்டு கேரளாவுக்கே ட்ரெயின் ஏறியிருக்க வேண்டியவர்.

‘ரஜினி முருகன்’ பட ஹிட்டானதால் விஜய்யுடன் ‘பைரவா’, சூர்யாவுடன் ‘தானா சேர்ந்த கூட்டம்’ குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையானார்.

அடுத்து வந்த ‘ரொமோ’வும் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் லிஸ்ட்டில் சேர்ந்ததால் கீர்த்திக்கு தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் மவுசு கூடியது. கைவசம் தமிழ், தெலுங்கு இருமொழிகளிலும் மாஸ் ஹீரோக்களின் படங்களை வைத்திருக்கிறார்.

இப்படி தானாக தேடி பெரிய ஹீரோக்களின் பட வாய்ப்புகள் வருவதால் கீர்த்தியின் அன்றாட நடவடிக்கைகளிலும் மாற்றங்கள் தெரிய ஆரம்பித்திருக்கிறது.

ஆமாம், முன்பெல்லாம் காலை 7 மணி படப்பிடிப்புக்கு ஆறே முக்காலுக்கே வந்து நிற்கும் கீர்த்தி சுரேஷ் இப்போதெல்லாம் 7 மணி படப்பிடிப்பு சாவகாசமாக 10 மணி வாக்கில் தான் வருகிறாராம்.

அதோடு வந்த வேகத்தில் என்னுடைய காட்சிகளை எடுத்து அனுப்பி விடுங்கள், நான் இன்னொரு படத்தோட ஷூட்டிங்குக்கு போகணும் என்று சீன் போடுகிறாராம்.

அவர் கொடுக்கும் இந்த அலப்பறையைப் பார்க்கும் இயக்குநர்கள் இந்த மாதிரி ஆட்களை எவ்வளவோ பார்த்தாச்சு என்று நக்கலாக சிரிக்கிறார்கள்.

சீன் போட்டு கேரியரை கெடுத்துக்காதம்மா…

Actress Keerthi SureshBairavaaKeerthi Sureshthaana serndha kootam
Comments (0)
Add Comment