நிஜ கபடி போட்டியிலும் கோப்பையை வெற்ற ‘கென்னடி கிளப்’ வீராங்கனைகள்!

பெண்கள் கபடியை கருவாக வைத்து சுசீந்திர இயக்கி வரும் படம் ‘கென்னடி கிளப்’. இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா, சசிகுமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்.

இந்தியா முழுவதிலும் உள்ள முக்கிய நகரங்கள் படப்பிடிப்பை முடித்த படக்குழுவினர் திண்டுக்கல், பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய சுற்றுவட்டார பகுதிகளில் படப்பிடிப்பு நடத்தினர். மேலும், இயக்குனர் சுசீந்திரனின் சொந்த ஊரான பழனிக்கு அருகில் உள்ள கணக்கம்பட்டியிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. தற்போது, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், விழுப்புரத்தில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இப்படத்தில் தமிழ்நாட்டிலேயே சிறந்த கபடி குழுவான ‘வெண்ணிலா கபடி குழு’விலிருந்து 7 நிஜ கபடி வீராங்கனைகளும் நடித்து வருகிறார்கள். இவர்கள் பெரிதாக கருதுவது தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பையைத்தான். இந்த கோப்பையின் மதிப்பு ரூ.12 லட்சம் ரூபாய். இப்போட்டி வருடந்தோறும் மாவட்ட வாரியாக நடைபெற்று இறுதிப் போட்டியில் வெல்லும் அணியினருக்கு ‘தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை’ வழங்கப்படும்.

இவ்வருடம் திருச்செங்கோட்டில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பையை ‘கென்னடி கிளப்’ படத்தில் நடித்து வரும் வீராங்கனைகள் தட்டிச் சென்றனர். இவர்களின் வெற்றி இவர்களுக்கு மட்டுமல்லாது படக்குழுவினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

டி.இமான் இசையமைக்கும் இப்படத்துக்கு ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்கிறார். நல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன் தயாரிக்கிறார்.

BharathirajaKennedy ClubMovie Newssasikumar
Comments (0)
Add Comment