ட்ரெண்டிங்-ஆன கிங் படத்தின் பாடல்

ஷாருக்கான் ரசிகர்களுக்கு உற்சாகம் தரும் செய்தி ஒன்று வந்துள்ளது. அவர் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘கிங்’ (King) திரைப்படத்தின் “து மில் ஜாயே” (Tu Mil Jaaye) பாடல், ஆர்மேக்ஸ் ஹார்ட்பீட்ஸ் (Ormax Heartbeats) வெளியிட்டுள்ள வாராந்திர டாப் 5 பாடல்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் இந்தப் பாடல் பெரும் வரவேற்பைப் பெற்று வருவதுடன், சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து டிரெண்டாகி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் இந்தப் பாடலின் ஹுக் ஸ்டெப்பை ரசிகர்கள் பலரும் ரீல்ஸ்களாக உருவாக்கிப் பகிர்ந்து வருகின்றனர். மேலும், பல்வேறு இசை ஸ்ட்ரீமிங் தளங்களிலும் இப்பாடல் கவனம் ஈர்த்து வருகிறது.

‘கிங்’ திரைப்படத்தில் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் இணைந்து நடித்துள்ள “து மில் ஜாயே” (Tu Mil Jaaye) பாடல், இருவரின் அசத்தலான கெமிஸ்ட்ரி, மனதை வருடும் இசை மற்றும் கண்கவர் காட்சிகள் ஆகியவற்றால் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இருவரும் மீண்டும் இணைந்து திரையில் தோன்றுவது ரசிகர்களிடையே கூடுதல் உற்சாகத்தை ஏற்பhttps://x.com/ormaxmedia/status/2120871206664753400?a=UeuQjf0kaquy0bc6r9M&s=46

Actor Shah Rukh KhanKing movie