விஜய் ஆண்டனி நடிக்கும் “கொலை”!

கொன்றது யார் எனும் ஹேஸ்டேக் சமூக வலை தளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது. கொலை படம் குறித்து பரவும் இந்த செய்தி திரைப்பட ஆர்வம் இல்லா பொது ரசிகர்களுக்கும், படத்தின் மீது பெரும் ஆர்வத்தை தூண்டுவதாக அமைந்துள்ளது. Infiniti Film Ventures நிறுவனம் Lotus Pictures உடன் இணைந்து தயாரிக்க, பாலாஜி K குமார் எழுதி இயக்கும் இப்படத்தில் விஜய் ஆண்டனி முதன்மை பாத்திரத்தில் நடிக்கிறார். ‘கொலை’ திரைப்படம் கடந்த ஒரு வாரமாக கோலிவுட்டில் பேசப்பட்டு வருகிறது. இந்த ‘கொலை’ சஸ்பென்ஸ் மர்ம திரைப்படத்தில் சம்பந்தப்பட்ட முக்கிய கதாபாத்திரங்களை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர்களின் புதுமையான முயற்சிக்கு பாராட்டுக்கள் கிடைத்து வருகிறது.

Actor Vijay AntonyActress Ritika SinghDirector Balaji KumarKolai movie