‘8 தோட்டாக்கள்’ இயக்குனரோடு ‘குருதி ஆட்டம்’ ஆடும் அதர்வா!

சென்ற ஆண்டு வெளியான படங்களில் விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்ட படம் ‘8 தோட்டாக்கள்’.

அந்த படத்தின் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் தமிழ்சினிமாவின் எதிர்கால இயக்குனர்களில் மிக முக்கியமானவராக வருவார் என்கிற கணிப்பும் ஏக மனதாகவே இருந்தது, இருக்கவும் செய்கிறது. அப்படிப்பட்ட நம்பிக்கைக்குரிய இயக்குனரான அவருடைய அடுத்த படத்துக்கு ‘குருதி ஆட்டம்’ என்று டைட்டில் வைத்துள்ளனர்.

தமிழ் திரை உலகின் தற்போதைய இளம் கதாநாயகர்களில் உச்ச நிலைக்கு போக தகுதியானவர் என பலரும் போற்றும் அதர்வா இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். ராக் போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் டி முருகானந்தம் மற்றும் பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் சார்பில் ஐ பி கார்த்திகேயன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தின் பூஜை எளிமையான முறையில் நடந்தது.

அப்போது பேசிய இயக்குனர் ஸ்ரீ கணேஷ் ”கமர்ஷியல் மற்றும் த்ரில்லரான இந்தப்படம் முழுக்க, முழுக்க மதுரை மாநகரின் பின்னணியில் உருவாகும் படமாகும். ஒரு வெற்றி படத்துக்கு உரிய அத்தனை அம்சங்களும் இந்த படத்தில் இருக்கும்.

நாளுக்கு நாள் தன்னுடைய கதாநாயகன் அந்தஸ்தை உயர்த்தும் அதர்வா இந்த படத்தின் கதாநாயகன், அவருடைய முழு திறமைக்கும் தீனி போடும் படமாக “குருதி ஆட்டம்” அமையும். கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த மாதத்தின் இறுதியில் படப்பிடிப்பு துவங்கும்” என்றார்.

AtharvaaDirector Sri GaneshKuruthi AatamKuruthi Aatam Movie News
Comments (0)
Add Comment