மறைந்த இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் இயக்கிய லாபம் படத்தில் விஜய்சேதுபதி ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் நேற்று சென்னை பிரசாத்லேப்-ல் இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அந்நிகழ்வில் கலந்து கொண்ட விஜய்சேதுபதி எஸ்.பி ஜனநாதன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார். குறிப்பாக எஸ்.பி ஜனநாதன் பற்றி பல விசயங்களை உருக்கத்தோடு பேசினார்.
மேலும் உணவு அரசியல், விவசாயம் சார்ந்த அரசியல் மற்றும் கிராமீயப் பொருளாதாரத்தைப் பற்றி ‘லாபம்’ படம் பேசுகிறது என அப்பட நாயகனும், தயாரிப்பாளர்களில் ஒருவருமான ‘மக்கள் செல்வன்’ விஜய்சேதுபதி தெரிவித்தார்.