விஜய் சேதுபதி படத்திலிருந்து லட்சுமிமேனன் நீக்கம்! : இதுதான் காரணமாமே?

‘கும்கி’யில் அறிமுகமான போதும், சுந்தர பாண்டியனில் திருத்திய முகமாக வந்த போதும் லட்சுமி மேனனை கொண்டாடாத ரசிகர்களே இல்லை.

அதற்காகவே அவர் நடிப்பில் அடுத்தடுத்து ரிலீசான ‘பாண்டிய நாடு’, ‘கொம்பன்’ படங்களெல்லாம் பட்டி தொட்டியெங்கும் பட்டையைக் கிளப்பிக் கொண்டு ஓடியது. ஆனால் அந்தப் படங்களில் சம்பாதித்து வைத்திருந்த மொத்த மார்க்கெட்டையும் ரெக்க படத்தில் இழந்து விட்டார் லட்சுமி மேனன்.

கொஞ்சம் கூட உடல் இளைக்காமல், முகத்தில் பொலிவும் இல்லாமல் படத்தில் காட்சியளித்தவரை படத்தின் மிகப்பெரிய மைனஸே இவர் தான் என்று தான் ரசிகர்கள் வெளிப்படையாகவே கமெண்ட் அடிக்கிற அளவுக்கு வாங்கிக் கட்டிக் கொண்டார்.

இதனால் அடுத்தடுத்த வாய்ப்புகள் இல்லாமல் இருந்தவருக்கு திடீரென்று விஜய் சேதுபதி ஜோடியாக மீண்டும் ‘கருப்பன்’ என்ற படத்தில் ஜோடி சேர வாய்ப்பு கிடைத்தது.

சந்தோஷத்தில் கமிட் செய்தவருக்கு இடையில் கேரளாவில் ஒரு குத்தாட்டம் போடக் கிடைத்த வாய்ப்பு தான் கருப்பன் கை விட நிலைமைக்குத் தள்ளி விட்டிருக்கிறது.

கேரளாவில் கல்லூரி விழா ஒன்றில் குத்தாட்டம் போட்ட போது கீழே தவறி விழுந்து காலில் காயம் வாங்கியிருக்கிறார் லட்சுமிமேனன்.

அதிலிருந்து மீண்டு வர குறைந்தது ஒரு மாத காலமாவது ஆகும் என்றதால் அதுவரை பொறுக்க முடியாது என்று சொன்ன ‘கருப்பன்’ பட இயக்குநர் பன்னீர் செல்வன் படத்திலிருந்து அவரை நீக்கி விட்டு அவருக்குப் பதில் இப்போது ‘பலே வெள்ளையத் தேவா’ பட நாயகி தான்யாவை விஜய் சேதுபதிக்கு ஜோடியாக்கியிருக்கிறார். இப்போது படப்பிடிப்பு எந்த தடங்கலும் இல்லாமல் திண்டுக்கல்லில் நடைபெற்று வருகிறது.

பாவம் லட்சுமிமேனன் தான் மீண்டும் பட வாய்ப்புக்காக காத்திருக்க வேண்டிய பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

Actor Vijay SethupathiActress Lakshmi menonKaruppanLakshmi MenonVijay Sethupathi
Comments (0)
Add Comment