வெயிட்டைக் குறைச்சாச்சு; சான்ஸ் கொடுங்க… : கேட்கிறார் லட்சுமிமேனன்

முதல் படமான ‘கும்கி’ என்கிற பெயருக்கு ஏற்றாற்போலவே அடுத்தடுத்து படங்களில் நடித்து ரொம்பவே பெருத்துப் போய் விட்டார் லட்சுமிமேனன்.

நடித்த படங்கள் எல்லாமே ஹிட்டானாலும் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடித்த றெக்க படத்தில் லட்சுமி மேனனின் எடையைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் அவரது அதிகாரப்பூர்வமான பேஸ்புக் பக்கத்தில் கூட கழுவி கழுவி ஊற்றி செமையாக கலாய்த்தனர்.

கண்டமேனிக்கு சாப்பிட்டாலும் உடம்பை பராமரிக்கும் நடிகைகளுக்கு மத்தியில் லட்சுமிமேனனோ உடம்பை பராமரிக்கும் விஷயத்தில் ரொம்பவே பின் தங்கியிருந்ததால் வந்த விளைவு தான் இது.

அதோடு அவருக்கான புதுப்பட வாய்ப்புகள் வெகுவாக குறைந்து விட்டது. இதை தற்போது உணர்ந்து கொண்ட லட்சுமிமேனன் உணவிலும் கட்டுப்பாட்டோடு இருப்பதுடன் சதா எந்நேரமும் ஜிம்மே கதியென்று கிடந்து இப்படி சில கிலோக்கள் வரை எடையை குறைத்திருக்கிறாராம்.

வெயிட்டைக் குறைச்சாச்சு; சான்ஸ் கொடுங்க… என்பது தான் லட்சுமிமேனனின் இப்போதைய தேடலாக இருக்கிறது.

Actress Lakshmi menonLakshmi Menon
Comments (0)
Add Comment