”உங்க சகவாசமே வேணாம், ஆளை விடுங்க சாமி”யாகி விட்ட மனநிலைக்கு வந்து விட்டார் ‘சொல்வதெல்லாம் உண்மை’ புகழ் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன்.
எல்லாம் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தால் ஆரம்பித்த சர்ச்சை தான்.
ஜி.வி பிரகாஷ் நடித்த அப்படத்தில் அவரும், ஆர்.ஜே பாலாஜியும் கூட்டாக சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை செம கலாய் கலாய்த்தார்கள். முழு நீள காட்சியாக படத்தில் வந்த அந்தக் காட்சியைப் பார்த்ததும் ஆர்.ஜே.பாலாஜியை ட்விட்டரில் திட்டித் தீர்த்தார் லட்சுமி ராமகிருஷ்ணன். சென்னையில வெள்ளம் வந்தப்போ ஹெல்ப் பண்ற மாதிரி ஹீரோ வேஷம் போட்டீங்கன்னு நான் சொன்னா உங்களுக்கு எப்படியிருக்கும் என்றெல்லாம் தாக்கினார்.
ஆனால் இதையெல்லாம் ஆர்.ஜே பாலாஜி சட்டை செய்யாததால் பதில் சொல்ல முடியாத கோழை என்று லெவல் இறங்கியும் திட்டிப்பார்த்தார்.
அப்படியும் பேசாமல் இருந்தார் ஆர்.ஜே பாலாஜி. ஆனால் அவருக்குப் பதில் ஜி.வி பிரகாஷ் பதில் கொடுத்தார். அதிலும் லட்சுமி ராமகிருஷ்ணன் சமாதானம் அடையாமல் ஆர்.ஜே பாலாஜியை தொடர்ந்து குறி வைத்து திட்டவும் லட்சுமி ராமகிருஷ்ணனை ஆர்.ஜே பாலாஜியின் ரசிகர்கள் சகட்டுமேனிக்கு திட்டித் தீர்க்க ஆரம்பித்து விட்டார்கள்.
ஆதரவை விட தனக்கு எதிர்ப்பு அதிகமானதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த லட்சுமி ராமகிருஷ்ணன் உங்க சகவாசமே வேணாம்பா என்று சோஷியல் மீடியாவை விட்டு வெளியேறுவதாக அறிவித்திருக்கிறார்.
“அனைத்து சமூக வலைத்தளங்களில் இருந்தும் வெளியேறுகிறேன். என்னை ஆதரித்தவர்களுக்கு நன்றி. மேலும், என்னை காயப்படுத்திய, அவமானப்படுத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று வருத்தத்தோடு குறிப்பிட்டு வெளியேறியிருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.
”என்னப்பா இப்படி பண்ணிட்டீங்களேப்பா..”