வீட்டுக்காரர் விஜய் அனுமதித்த பிறகும் அவரது குடும்பத்தார் அமலாபால் தொடர்ந்து நடிப்பதை விரும்பாததால் இப்போது இருவரின் தெய்வீகக் காதலும் விவாகரத்து கேட்கிற அளவுக்கு வந்து நிற்கிறது.
குறிப்பாக தனுஷின் ‘வட சென்னை’ படத்தின் மூன்று பாகங்களில் அமலாபால் நடிக்க ஒப்புக் கொண்டது தான் விவகாரம் சீரியஸ் ஆனதுக்கு முக்கிய காரணம் என்கிறார்கள்.
அமலாபாலின் விவாகரத்து முடிவை இயக்குநர் விஜய் விரும்பாவிட்டாலும் அமலாபாலின் முடிவுக்கு அவர் வயது நடிகைகள் பெரும் ஆதரவு தெரிவித்து துணிச்சலான முடிவு என்றெல்லாம் கருத்து தெரிவித்து வந்தனர்.
சக நடிகைகளின் ஆதரவை விட இனிமேல் படம் எடுக்கப் போகும் இயக்குநர்களின் ஆதரவு தான் அமலாபாலுக்கு முக்கியம். ஆனால் அந்த விஷயத்தில் அமலாபாலுக்கு தோல்வியே கிடைக்கும் போலத் தெரிகிறது.
ஆமாம், இயக்குனர் ஏ.எல்.விஜய்யை அமலாபாபை விவாகரத்து செய்யப்போகிறார் என்ற தகவல் வெளியானதும் அதுவரை அமலாபாலுக்கு வாய்ப்பு தருவதாகச் சொன்ன இயக்குநர்கள் வட்டாரம் எல்லாம் அப்படியே பேக்கடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். இப்போதுள்ள எல்லா இயக்குநர்களும் இயக்குநர் விஜய்க்கு நெருக்கமானவர்கள் என்பதால் எங்கே தங்கள் படங்களில் வாய்ப்பு கொடுத்தால் விஜய் குடும்பத்தார் கோபித்துக் கொள்வார்களோ? என்கிற தயக்கம் தான் இதற்கு காரணம்.
திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து வாய்ப்புகள் வந்ததால் தான் அதை நம்பி விவாகரத்து முடிவை தைரியமாக எடுத்தார் அமலாபால். தற்போது சினிமா வாய்ப்புகளே கிடைக்காத நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதால் கடும் அதிர்ச்சியில் இருக்கிறாராம்.