காலமானார் ‘உதிரிப்பூக்கள்’ மகேந்திரன்

சிறுநீரக் கோளாறு காரணமான சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல இயக்குனர் மகேந்திரன் இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 79.

1966-ம் ஆண்டு “நாம் மூவர்” என்ற படத்திற்கு மகேந்திரன் கதை எழுதி அதன் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகமானவர் தொடர்ந்து “சபாஷ் தம்பி”, “பணக்காரப்பிள்ளை” ஆகிய படங்களுக்கு மகேந்திரன் கதை எழுதினார். சிவாஜி கணேசன் நடித்த “நிறைகுடம்” படத்திற்கும் கதை எழுதினார்.

அவர் கதை, வசனம் எழுதிய ‘தங்கப்பதக்கம்’ என்ற நாடகத்தை சிவாஜி பிலிம்ஸ் திரைப்படமாக எடுத்தது. பி.மாதவன் டைரக்ட் செய்தார். அப்படத்தில் எஸ்.பி.சவுத்ரி வேடத்தில் சிவாஜி வாழ்ந்து காட்டினார். மகத்தான வெற்றிபெற்ற அந்தப்படம் தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியானது. தொடர்ந்து ‘முள்ளும் மலரும்’, ‘ஜானி’, ‘உதிரிப்பூக்கள்’ என காலத்தால் அழியாத பல காவியப் படங்களைக் கொடுத்தார்.

விஜய்யின் ‘தெறி’ படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுத்த அவர் தொடர்ந்து ‘சீதக்காதி’, ‘பேட்ட’, ‘பூமராங்’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.

இயக்குனர் மகேந்திரனின் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்களும், ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

Director Mahendran
Comments (0)
Add Comment