‘மாமனிதன்’ படத்திற்கு டோக்கியோ திரைப்பட விருது!

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில், ‌சீனு ராமசாமியின் இயக்கத்தில் வெளியான ‘மாமனிதன்’ எனும் திரைப்படம், தமிழர்களுக்கென நூறு சதவீத பொழுதுபோக்கு அம்சங்களுடன் இயங்கும் டிஜிட்டல் தளமான ‘ஆஹா’ டிஜிட்டல் தளத்தில் வெளியாகி, குறுகிய கால அவகாசத்திற்குள் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனைப் படைத்து வருகிறது. இந்நிலையில் ‘ஆஹா’வில் வெளியான ‘மாமனிதன்’ படத்திற்கு, ‘ஆசிய நாடுகளுக்கான சிறந்த படம்’ என தேர்ந்தெடுக்கப்பட்டு, டோக்கியோ திரைப்பட விருது வழங்கப்பட்டிருக்கிறது.

ஜப்பான் நாட்டில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாக்களில் ‘டோக்கியோ திரைப்பட விருது’ எனும் சர்வதேச திரைப்பட விழாவும் ஒன்று. திரைப்படத்துறை மற்றும் தொலைக்காட்சி துறையை சார்ந்த நிபுணர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த படைப்பாளிகள் ஒருங்கிணைந்து வழங்கும் இந்த ‘டோக்கியோ திரைப்பட விருது’ சர்வதேச அளவிலான கலைஞர்களின் சிறந்த விருதாக கருதப்படுகிறது. இந்த ஆண்டிற்கான டோக்கியோ திரைப்பட விருது , ஆசியாவின் சிறந்த படமாக ‘மாமனிதன்’ தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்கு தங்க பதக்கம் வழங்கப்பட்டிருக்கிறது.

Actor Vijay SethupathiahaTamildirector SeenuramasamyMaaManithan movie