தெலுங்கில் பிரம்மாண்டமாக வெளியாகும் ‘மாயோன்’!

தமிழக திரையரங்குகளில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் சிபி சத்யராஜ் நடித்த ‘மாயோன்’ தெலுங்கில் பிரமாண்டமாக வெளியாகிறது. ‘மாயோன்’ திரைப்படத்தை குடும்பத்தினருடன் கண்டுகளித்த சத்யராஜ், படத்தின் இறுதியில் ரசிகர்கள் தங்களின் இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று, அரங்கம் அதிர கரவொலி எழுப்பி, ‘மாயோன்’ படக்குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்தனர். இதனை நேரில் பார்த்து வியந்த சத்யராஜ், ‘ரசிகர்களின் கைத்தட்டல்கள் தான் மாயோன் படத்திற்கு கிடைத்த பாராட்டு’ என்றார்.

டபுள் மீனிங் புரொடக்சன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் திரைக்கதை எழுதி, தயாரித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘மாயோன்’. யாரும் எளிதில் யூகிக்க இயலாத காட்சிகளை அமைத்து படத்தை நேர்த்தியாக அறிமுக இயக்குநர் கிஷோர் இயக்கி இருப்பதாக விமர்சனங்கள் வெளியாகி, படத்தை வெற்றி பெறச் செய்திருக்கிறது. இந்த தருணத்தில் தமிழ் திரை உலகில் கடவுள் மறுப்பு கொள்கைகளில் தீவிர ஈடுபாடு உடையவரும், பெரியாரிய சிந்தனையாளருமான புரட்சி நடிகர் சத்யராஜ், குடும்ப உறுப்பினர்களுடன் ஆன்மீகமும், அறிவியலும் கலந்த ‘மாயோன்’ திரைப்படத்தை வடபழனியில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் அமைந்த திரையரங்கில் கண்டுகளித்தார்.

Actor Sibi SathyarajActress Tanya Ravichandrendirector Kishore NMaayon movie