‘மகுடம்’ படத்தின் லிங்கா பாடல்!

ரசிகர்களிடத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் விஷால் நடிப்பில் உருவாகும் ‘மகுடம்’ திரைப்படமும் ஒன்று. காரணம், இப்படத்தை விஷால் இயக்கி நடிப்பது தான். இப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் தனி பாடலான “லிங்கா…” வெளியான இரண்டு நாட்களில் மில்லியன் பார்வையாளர்களை கடந்து பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

தமிழ் சினிமாவில் புதிய இசைக் கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் அறிமுகமாகி தங்களது இசையால் மக்களை கவர்ந்து வரும் நிலையில், இப்பாடலை பாடிய ராப் பாடகர் வினோத் என்கிற V7h “லிங்கா…” பாடல் மூலம் இளசுகளின் பேவரைட் பாடகராக உருவெடுத்துள்ளார்.

தமிழ் மற்றும் ஆங்கிலம் கலந்த வார்த்தைகளை கொண்டு மாஸான ராப் பாடலாக உருவாகியுள்ள இப்பாடல், லிங்கா கதாபாத்திரத்தை விவரிக்கும் விதமாகவும், அந்த கதாபாத்திரத்தின் கெத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் அமைந்துள்ளது. வினோத் எழுதிய இப்பாடலை அவருடன் இணைந்து ஜி.வி.பிரகாஷ் குமாரும் பாடியிருக்கிறார்.

Actor VishalMagudam movie