நடிகை ஹன்ஷிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும், அவரது 50 வது திரைப்படமான “மகா” படம் ஏற்கனவே ரசிகர்களிடம் விஷுவல் புரமோக்களின் மூலம், பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்திற்கான எதிர்பார்ப்பும் பெரிய அளவில் உள்ள நிலையில், இத்திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஹன்ஷிகா மோத்வானி முதன்மை பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் சிலம்பரசன் TR கௌரவ பாத்திரமொன்றில் தோன்றுகிறார். ஶ்ரீகாந்த், கருணாகரன், முக்கியமான பாத்திரங்களில் நடிக்கின்றனர். தம்பி ராமையா, பேபி மானஸ்வி, மற்றும் பல முக்கிய நட்சத்திரங்க்கள் இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.