பிரசாந்த் வர்மா சினிமாடிக் யுனிவர்ஸின் முதல் திரைப்படமாக பிரசாந்த் வர்மா எழுதி இயக்கிய ஹனுமான் பான் இந்தியா பிளாக்பஸ்டராக வெற்றி பெற்றது. PVCU3 சினிமாடிக் யுனிவர்ஸின் அதிகாரப்பூர்வ 3வது திரைப்படத்தை அறிவித்துள்ளார். RKD Studios சார்பில் ரிவாஸ் ரமேஷ் துக்கல் இப்படத்தை தயாரிக்க, RK துக்கல் வழங்குகிறார். RKD Studios இந்தியாவின் முன்னணி மோஷன் பிக்சர் தயாரிப்பு, விநியோகம் மற்றும் கையகப்படுத்தும் நிறுவனமாகும், இந்த திரைப்படத்தின் மூலம் தயாரிப்பில் களமிறங்குகிறது. கதை மற்றும் திரைக்கதையை பிரசாந்த் வர்மா எழுத, பெண் இயக்குநர் பூஜா அபர்ணா கொல்லுரு இப்படத்தை இயக்குகிறார். ஆன்மீகம் மற்றும் புராணங்களை சமகால சிக்கல்களுடன் கலந்து இக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் இருந்து வரும் முதல் பெண் சூப்பர் ஹீரோ படம் மற்றும் இந்த சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகவும் அசத்தலான சூப்பர் ஹீரோவாகும்.
இப்படத்திற்கு வங்காளத்தின் வளமான கலாச்சார பின்னணியில் அமைக்கப்பட்ட “மஹாகாளி” என்ற தலைப்பை தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர். இந்த சக்திவாய்ந்த மற்றும் சமூகம் சம்பந்தப்பட்ட திரைப்படம், இந்திய சினிமாவில் ஒரே மாதிரியான கருத்துக்களை உடைத்து, அழகு தரத்தை மறுவரையறை செய்து, முக்கிய பாத்திரத்தில் கருமை நிற நடிகையால் காளி தேவியின் தைரியமான மற்றும் புத்துணர்ச்சியூட்டும் சித்தரிப்பைக் கொண்டிருக்கும்.
“மஹாகாளி” திரைப்படத்தை, இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் ஐமேக்ஸ் 3டியில் கண்டுகளிக்கலாம். இந்த யுனிவர்ஸில் “ஹனுமான்” சமீபத்தில் ஜப்பானில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.”மகாகாளி” வெறும் திரைப்படம் அல்ல. இது உரிமைகள் மற்றும் பிரதிநிதித்துவத்தை நோக்கிய இயக்கம்!