மண்டாடி IMAX® ஃபார்மேட்டில் வெளியாகிறது

  1.  

    RS Infotainment நிறுவனம் தயாரிப்பில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள அடுத்த திரைப்படமான “மண்டாடி”, வரும் செப்டம்பர் 10, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், இந்தியா முழுவதும் உள்ள IMAX® திரைகளிலும் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

    இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகியுள்ள “மண்டாடி” திரைப்படம், பாரம்பரிய பாய்மரப் படகு போட்டி மற்றும் தமிழ்நாட்டின் கடலோர சமூகங்களின் கடல்சார் கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட விளையாட்டு ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகியுள்ளது.

Actor SooriMandaadi movie