மன்மதலீலை பிரம்மாண்டமான ஆடியோ லான்ச்!

Rockfort Entertainment சார்பில் T.முருகானந்தம் தயாரிக்க, இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில், அசோக் செல்வன் நடிப்பில், நவீன இளைஞனின் வாழ்வில் நடக்கும் லீலைகளை சொல்லும் ஒரு அருமையான கமர்ஷியல் படமாக உருவாகியுள்ள படம் தான், “மன்மதலீலை”. இப்படத்திற்கு பிரேம்ஜி அமரன் இசையமைத்துள்ளார்.

2022 ஏப்ரல் 1 உலகமெங்கும் இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு படக்குழுவினர் கலந்து கொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. Rockfort Entertainment சார்பாக கிரியேடிவ் புரொடுயுசர் K.B.ஶ்ரீராம் அனைவரையும் வரவேற்றார்.இந்நிகழ்வினில் Rockfort Entertainment சார்பாக நடிகர் சங்க துணைத் தலைவர் திரு பூச்சி முருகனிடம், நடிகர் சங்க வளர்ச்சி நிதியாக ரூபாய் 5 லட்சத்திற்கான காசோலை அளிக்கப்பட்டது. 

actor Ashok SelvanActress Samyuktha HegdeDirector Venkat PrabhuManmathaLeelai movie