திருட்டு விசிடிக்கு துணை போன தியேட்டர் அதிபர்! – கடும் கோபத்தில் ‘மனுஷனா நீ’ தயாரிப்பாளர்!

மிழ்சினிமாவில் முக்கியமான எதிரியே திருட்டு விசிடி தான். தயாரிப்பாளர்களின் லாபத்தை மறைமுறைமாக விழுங்கும் இந்த சட்ட விரோதத் தொழிலை ஒழிக்க தயாரிப்பாளர் சங்கம் பல வழிகளில் போராடி வருகிறது. இருந்தாலும் இதை ஒழிப்பது என்பது இன்றுவரை நின்றபாடில்லை.

சில சமயங்களில் இந்த திருட்டு விசிடி புதுப்படங்கள் வெளியாகும் தியேட்டர்களிலேயே எடுக்கப்படுகிறது என்கிற குற்றச்சாட்டும் தயாரிப்பாளர்கள் தரப்பில் அவ்வப்போது வைக்கப்படுகிறது.

அது எந்தளவுக்கு உண்மை என்று உறுதியாகத் தெரியாத நிலையில் நான் இயக்கித் தயாரித்த படத்தை தியேட்டரில் தான் திருட்டுத் தனமாக எடுத்திருக்கிறார்கள் என்று கொந்தளித்திருக்கிறார் சென்ற வாரம் வெளியான ‘மனுஷனா நீ’ படத்தின் இயக்குநரும், தயாரிப்பாளருமான கஸாலி.

இது குறித்து கஸாலியிடம் கேட்டபோது, ”இணையத்தில் திருட்டுத்தனமாக வெளிவரக் கூடாது என்பதற்காகவே வெளிநாட்டு உரிமை, மற்ற மாநிலங்களில் திரையிடும் உரிமை என்று எதுவும் கொடுக்காமல் தமிழ்நாட்டுத் திரையரங்குகளில் மட்டும் என்னுடைய படத்தை வெளியிட்டேன். ஆனாலும் தியேட்டரில் கேமரா வைத்து எடுத்து நெட்டில் திருட்டுத்தனமாக வெளியிட்டு விட்டனர்.

ஆனால் இதை நாம் சும்மா விடப்போவதில்லை ஃபாரன்சிக் வாட்டர்மார்க் வைத்து படத்தை எந்தத் தியேட்டர், எத்தனை மணிக்கு திருட்டுத்தனமாக எடுக்கப்பட்டது என்பதை கண்டுபிடித்து விடலாம். அந்த விபரங்கள் வெகு விரைவில் கிடைக்கும்.

கிடைத்தவுடன் அந்தத் தியேட்டர்மேல் போலீஸில் புகார் கொடுக்கவும், வழக்குத் தொடுக்கவும், முதல் அமைச்சர் மற்றும் முக்கிய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர் என்று அனைத்து இடங்களிலும் மனு அளிக்க உள்ளேன்.

இந்த திருட்டுத் தனமான டிஜிட்டல் வெளியீட்டினால் தமிழ் சினிமாவிற்கு ஆண்டிற்கு 500 முதல் 600 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது” என்று கோபத்தோடு கூறினார் கஸாலி.

Ghazalimanusana neemanusana nee piracy issue
Comments (0)
Add Comment