‘500 கிலோ கேக்’குக்காக வருத்தப்பட்ட லாரன்ஸ்! : தேவையா இந்தக் கெட்டப் பேரு?

று நாட்களாக அமைதியாக நகர்ந்த ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான அறவழிப் போராட்டம் மனிதாபிமானம் துளியும் தென்படாத காக்கிகளின் ஊடுருவலால் வன்முறைக் களமானது.

வயதான பாட்டிகள், கர்ப்பிணிப் பெண்கள், இளம் பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள், இளம் பெண்கள் என அத்தனை பேர் மீதும் கண்முடித்தனமாக கொடூரத் தாக்குதலை நடத்தி உலகமே வாய்க்கொட்டி சிரிக்கும்படி செய்து விட்டது தமிழக காவல்துறை.

இந்தப் போராட்டம் தொடங்கிய நாளிலிருந்தே அரசியல்வாதிகள் யாரையும் மாணவர்கள் உள்ளே விடவில்லை. ஆனால் சில நடிகர், நடிகைகள் ஆதரவு தெரிவிக்கும் நோக்கத்தோடு வந்தார்கள்.

அங்கு தான் போராட்டமே திசை திரும்ப ஆரம்பித்தது என்கிறார்கள் மாணவர்களும், இளைஞர்களும்…

”சார் முதல் இரண்டு நாட்கள் ரொம்ப நல்லபடியா போராட்டம் போய்க்கிட்டிருந்துச்சு. மூணாவது நால் லாரன்ஸ், செளந்தர், ஹிப் ஹாப் ஆதி இவங்கெல்லாம் வர ஆரம்பிச்சாங்க. வந்து பேசிட்டு போயிடுவார்ன்னு பார்த்தா அங்கேயே உட்கார்ந்திட்டார். சரி உடல்நிலை சரியில்லாத நேரத்திலும் நம்ம கூட இருக்காரேன்னு நாங்களும் அவரை ஒரு சேர் போட்டு உட்காரச் சொன்னோம். அதன்பிறகு எங்க போராட்டத்துக்கு அவரே தலைவர் மாதிரி செயல்பட ஆரம்பிச்சிட்டார்.

போராட்டத்தை ஆரம்பிச்ச எங்களையெல்லாம் பேச விடாம செளந்தர் மாதிரி யார் யாரையெல்லாமோ மைக்கைப் பிடிச்சு பேச வெச்சார். அவங்களைச் சுத்தி சில ஆட்கள் நின்னுக்கிட்டு எங்களையே அங்க பேச விடல. கடைசியில பார்த்தா நாங்க ஆரம்பிச்ச போராட்டம்னு நேத்து பேட்டி கொடுக்கிறார்” என்றார்கள் வருத்தத்தோடு

அதோடு இன்னொரு விஷயமும் சொன்னார்கள்.

”முதல் தடவையா கூட்டத்துல பேசுன லாரன்ஸ் என் சார்பா இந்தப் போராட்டத்துக்கு 1 கோடி ரூபாய் தர்றேன்னு சொன்னார். போராட்டத்தை முடிச்சுக்கப் போறோம்னு பேட்டி கொடுத்தப்ப இந்த வெற்றியைக் கொண்டாடுறதுக்காக 500 கிலோ கேக் வாங்கி வெச்சிருந்தோம். அதெல்லாம் இப்போ வீணாப்போச்சுன்னு வருத்தப்படுறார்.” 1 கோடி ரூபாய் தர்றேன்னு சொன்ன லாரன்ஸ் 500 கிலோ கேக்குக்காக வருத்தப்படுகிறார்.

மொத்தத்துல எங்களை வழி நடத்துறேங்கிற பேர்ல உள்ள வந்து போராட்டத்தை திசை திருப்பி அவருக்கு நல்லா பப்ளிசிட்டி தேடிக்கிட்டார் என்றார்கள் மாணவர்கள் பெரும் மன வேதனையோடு!

லாரன்ஸ் நீங்க நடிகர் சங்கப் போராட்டத்திலேயே குந்திக்கினு போயிருக்கலாம்.

JallikattuJallikattu ProtestLawrenceMarinaMarina ProtestRaghava Lawrence
Comments (0)
Add Comment