மார்க் ஆண்டனி- விமர்சனம்

படத்தின் தலைப்பு 90-களின் ட்ரெண்டிங் தலைப்பு. அந்த தலைப்புக்கு படம் நியாயம் செய்துள்ளதா?

நிகழ்காலத்தில் விஷால் ஒரு கார் மெக்கானிக். டான் ஆன எஸ்.ஜே சூர்யா கண்பார்வையில் வாழும் விஷாலுக்கு இறந்து போன தன் அப்பாவை பிடிக்காது. எஸ்.ஜே சூர்யாவைத் தான் பிடிக்கும். அதற்கான காரணம் கதையில் இருக்கு. மேலும் எஸ்.ஜே.சூர்யாவின் மகனான இன்னொரு எஸ்.ஜே சூர்யா ரிதுவர்மாவை லவ் பண்ணுகிறார். ரிதுவர்மா விஷாலை லவ் பண்ணுகிறார். இப்படியான குழப்பத்தில் கதை நகர,ஒரு டைம் ட்ராவல் செய்யும் போனை கண்டுபிடிக்கிறார் செல்வராகவன். அந்தப் போன் விஷால் வாழ்வில் இதுவரை பயணித்த வாழ்வையே புரட்டிப் போட அடுத்தடுத்து என்ன நடந்தது என்பதே மார்க் ஆண்டனி

நடிப்பில் விஷாலை ஈசியாக காலி செய்துவிடுகிறார் எஸ்.ஜே சூர்யா. சின்னச் சின்ன மாடுலேசன்கள், முகபாவனைகள் என அனைத்திலும் எஸ்.ஜே சூர்யா..செம்ம செம்மய்யா.. விஷால் சண்டைக்காட்சிகள் தவிர்த்து எல்லா இடங்களிலும் ஓவர் ஆக்டிங் செய்து கடுப்பேற்றுகிறார். செல்வராகவன் எங்குமே ஸ்கோர் செய்யவில்லை. லாஸ்ட் ஷாட் மட்டும் ஓகே. சுனில், கிங்ஸ்ட்லி, YG.மகிந்திரன் ஆகியோர் தடம்பதிக்கவில்லை. நாயகி ரிதுவர்மாவும் அப்படியே

ஜிவி இசை என்ற பெயரில் இம்சையை கொடுத்துள்ளார். ஒளிப்பதிவு ஓகே ரகம். எடிட்டர் சவால் நிறைந்த பணியை அழகாக சமாளித்துள்ளார்

கதை துவங்கும் போதே இந்தப்படம் இவ்ளோதான் என்று தோன்றும் படியான காட்சியமைப்புள் நம்மை அலுப்புற செய்கிறது. முன்பாதியில் படம் ஏகத்திற்கும் சோதிக்கிறது. பின்பாதியில் எஸ்.ஜே போர்ஷன்கள் மட்டும் அதிரிபுதிரியாக வொர்க்கவுட் ஆகியுள்ளது. அந்த ஒரு மேட்டர் மட்டும் தான் மார்க் ஆண்டனியை காப்பாற்றுகிறது
2.75/5

Actor SJ SuryahActor VishalActress Ritu VarmaDirector Adhik RavichandranMarkAntony movie