தடையை உடைத்தெறியும் ‘மெர்சல்’ : உலகம் முழுவதும் 3300 தியேட்டர்களில் ரிலீஸ்!

த்திய அரசின் ஜி.எஸ்.டி வரியைக் கட்டுகிறோம், ஆனால் அதன் கூடவே தமிழக அரசு போட்ட 30 சதவீதம் கூடுதலான உள்ளூர் வரியைத்தான் எங்களால் கட்டவே முடியாது அதனால் அதை முழுமையாக நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கம். அதோடு தமிழக அரசு இந்த வடி விதிப்பை கைவிடும் வரை புதுப்படங்கள் எதையும் ரிலீஸ் செய்யப் போவதில்லை என்றும் தடாலடியாக அறிவித்தார் விஷால்.

இதனால் சென்ற வாரம் ரிலீசாகவிருந்த ‘விழித்திரு’ உள்ளிட்ட 8 திரைப்படங்கள் ரிலீசாகவில்லை. இந்த வாரமும் எந்த படமும் ரிலீசாகாது என்கிற நிலையில் அடுத்த வாரம் தீபாவளிக்கு விஜய் நடித்த ‘மெர்சல்’ படம் ரிலீசாகுமா? ஆகாதா? என்கிற பலத்த சந்தேகம் தான் விஜய் ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களுக்கும் ஏற்பட்டது.

ஆனால் என்ன தடை வந்தாலும் ‘மெர்சல்’ படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்தே தீருவது என்கிற திட்டவட்டமான முடிவில் இருக்கிறாராம் மெர்சல் தயாரிப்பாளர்.

அந்த வகையில் வரும் அக்டோபர் 18 ம் தேதி ரிலீசாக இருக்கும் மெர்சல்  உலகம் முழுவதும் 3300 தியேட்டர்களில் ரிலீசாகிறது. தமிழகத்தில் 500 தியேட்டர்கள், கேரளாவில் 325 தியேட்டர்களிலும் வெளியாகிறது. தெலுங்கில் அதிரிந்தி என்ற பெயரில் ரிலீசாகும் மெர்சலுக்கு இதுவரை எந்த விஜய் படத்துக்கும் இல்லாத அளவுக்கு தியேட்டர்களில் கிடைத்துள்ளது.

புதுப்படங்கள் ரிலீஸ் இல்லை என்று அறிவித்ததால் பாதிக்கப்பட்ட சிறு படத் தயாரிப்பாளர்களை சமாதானப்படுத்தி விட்ட விஷால் மெர்சல் பட விஷயத்தில் அவ்வாறு செய்ய முடியாது என்பதால் தீபாவளிக்கு முன்பாகவே தமிழக அரசுடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி இந்தப் பிரச்சனையை தீர்த்து விடும் முனைப்பில் இறங்கியிருக்கிறாராம்.

ஒருவேளை இந்தப் பிரச்சனையில் சுமூக முடிவு எட்டப்படாவிட்டாலும் கூட திட்டமிட்டபடி விஜய் ரசிகர்களுக்கு இந்த தீபாவளி ‘மெர்சல்’ தீபாவளியாக இருக்கும் என்பது மட்டும் உண்மை.

IlayathalapathyKajal AggarwalMersalMersal Diwalimersal releaseSamanthavijay
Comments (0)
Add Comment