விஜய் ரசிகர்களே வெளியிட்ட மெர்சல் அனிமேஷன் டீஸர் : ஒரிஜினல் டீஸர் எப்போது தெரியுமா?

ட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘மெர்சல்’ படத்தின் ஆடியோ ரிலீஸ் பங்ஷன் சென்ற மாதம் 20-ம் தேதி சென்னையில் மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது.

அந்த விழாவில் படத்தின் டீஸர் வெளியிடப்படும் என்று அங்கு குழுமியிருந்த ரசிகர்கள் அத்தனை பேரும் எதிர்பார்த்தனர். ஆனால் டீஸர் வெளியிடப்படவில்லை.

நிகழ்ச்சியில் பேசிய டைரக்டர் அட்லி மெர்சல் படத்தின் டீஸர் விரைவில் வெளியிடப்படும் என்று அறிவித்தார்.

தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பிலும் விரைவில் டீஸர் வெளியாகும் என்கிற அறிவிப்பு சமூக வலைத்தளங்களில் வெளியிடப்பட்டு வந்தது.

ஆனால் இன்று வரை மெர்சல் படத்தின் டீஸர் வெளியாகவில்லை. இதனால் வெறுப்படைந்த விஜய் ரசிகர்கள் மெர்சல் டீஸர் எப்போது எப்போது? என்று கேட்டுக் கொண்டே வந்தனர்.

உச்சக்கட்டமாக இனிமேலும் பொறுக்க முடியாது என்கிற முடிவுக்கு வந்த அவர்கள் தாங்களாகவே மெர்சல் படத்தின் டீஸர் ஒன்றை தயாரித்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.

விஜய் மாதிரியே அனிமேஷனில் ஒரு உருவத்தை உருவாக்கி அந்த உருவம் ஜல்லிக்கட்டு காளையை அடக்குவது போல அந்த டீஸரை உருவாக்கியிருக்கிறார்கள். 29 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த டீஸருக்கு பக்கா மாஸ் என்று டைட்டிலும் வைத்திருக்கிறார்கள்.

இதற்கிடையே மெர்சல் படத்தின் டீஸர் அட்லி பிறந்தநாளான இந்த மாதம் 21-ம் தேதி ரிலீசாகலாம் என்கிற புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.

AtleeMersalMersal TeaserThalapathyvijay
Comments (0)
Add Comment