திரைப்படமாகிறது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு!

மிழக மக்களின், குறிப்பாக ஏழை, எளியோர், விளிம்பு நிலை மக்களின் இதயங்களில் நிஜமான கதாநாயகனாக வாழ்ந்து மறைந்தவர் எம்.ஜி.ஆர்.

இன்றைக்கும் அவருடைய புகழ் தமிழக மக்கள் மனதில் மங்காமல் நிலைத்து நிற்கிறது. அந்தளவுக்கு பேரும், புகழோடும் நல் இதயம் கொண்டவராக வாழ்ந்த எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாகத் தயாரிக்கிறது ‘காமராஜ்’ திரைப்படத்தை தயாரித்த ரமணா கம்யூனிகேஷன்ஸ் பட நிறுவனம்.

திரைத்துறையிலும், அரசியலிலும் சந்தித்த சவால்கள், சோதனைகள், சூழ்ச்சிகள், அதை முறியடித்து வெற்றிகண்ட சுவாரஸ்யமான சம்பவங்கள் திரைக்கதையாக இப்படத்தில் தொகுக்கப்பட்டுள்ளது. எவ்வித சமரசமுமின்றி எம்.ஜி.ஆரின் வாழ்க்கை சம்பவங்களை கொண்டு தயாராகும் இப்படத்திற்கு அன்றைய அரசியல் தலைவர்களின் உருவ ஒற்றுமையுள்ள நடிகர்கள் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது.

தமிழ்த் திலையுலகின் முன்னணி தொழில் நுட்ப கலைஞர்கள் பங்கேற்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வெகுவிரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது.

mgrmgr historymgr life history
Comments (1)
Add Comment