ஹாட்ரிக் ஹீரோ ஜெயம் ரவி : ‘மிருதன்’ படத்துக்கு கடும் கிராக்கி!

செண்டிமெண்ட்டால் சூழப்பட்டிருக்கும் திரையுலகில் கடந்த ஆண்டு உழைப்பை மட்டுமே நம்பி தொடர்ந்து மூன்று ஹாட்ரிக் வெற்றிகளை அறுவடை செய்த ஹீரோ ஜெயம்ரவி.

2015 ஆம் வருடத்தில் ரோமியோ ஜுலியட், தனி ஒருவன், பூலோகம் என ஹாட்ரிக் ஹிட் கொடுத்தவர் ஜெயம்ரவி.

எனவே அவரது நடிப்பில் அடுத்து ரிலீசாக உள்ள ‘மிருதன்’ படத்துக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது. ரசிகர்கள் ஒரு பக்கம் ‘மிருதன்’ படத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம், தியேட்டர்காரர்கள் மத்தியிலும் ‘மிருதன்’ படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த வருடம் ஜெயம் ரவி நடித்த ‘ரோமியோ ஜுலியட்’, ‘தனி ஒருவன்’, ‘பூலோகம்’ படங்களைத் திரையிட்ட வகையில் மிகப்பெரிய அளவில் வசூலை அள்ளிய தியேட்டர் உரிமையாளர்கள் ‘மிருதன்’ படத்தை திரையிட போட்டி போடுகின்றனர். இதனால் மிருதன் படத்துக்கும் கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.

அது மட்டுமல்ல, ஏதோவொரு காரணத்தினால் ரோமியோ ஜுலியட், தனி ஒருவன், பூலோகம் படங்களை தவறவிட்டதால் லாபத்தை பார்க்காத தியேட்டர்காரர்களும் எப்படியாவது மிருதன் படத்தை தங்களின் தியேட்டர்களில் ரிலீஸ் பண்ண வேண்டும் என்று துடியாய்த் துடிக்கிறார்களாம்.

இப்படியாக தியேட்டர்காரர்கள் மத்தியில் ஏற்பட்ட போட்டியினால் மிருதன் படம் ரிலீஸ் ஆகும் தியேட்டர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி சுமார் 400 தியேட்டர்களில் மிருதன் படம் வெளியாக உள்ளது.

ரிலீஸ் தேதிக்கு இன்னும் சில தினங்கள் இருப்பதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்கிறார்கள் மீடியேட்டர்கள்.

ஹாட்ரிக் ஹிட் ஹீரோவாச்சே… இருக்காதா பின்னே..?

Jayam RaviLakshmi MenonMirudhanஜெயம் ரவிமிருதன்லட்சுமி மேனன்
Comments (0)
Add Comment