அனிமேஷன் காட்சிகளுடன் வருகிறது ‘மிஷன் சாண்டா’!

தரத்தில் எந்த சமரசமும் இல்லாமல் சர்வதேச திரைப்படங்களுடன் ஒப்பிடும் வகையிலான அனிமேஷன் காட்சிகளுடன் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ள ‘மிஷன் சாண்டா’திரைப்படம், உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கிறிஸ்துமஸ் வெளியீடாக வெளியாகிறது.

வண்ணமிகு, மாயாஜாலம் நிறைந்த பெரிய திரை அனுபவமாக, விடுமுறை காலத்தில் குடும்பத்துடன் கண்டு களிப்பதற்கான திரைப்படமாக இது இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ‘மிஷன் சாண்டா’ பிரம்மாண்ட காட்சிகள், வேகமான திரைக்கதை மற்றும் கவர்ந்திழுக்கும் அனிமேஷன் மூலம் நம்பிக்கை, தைரியம் மற்றும் ஒற்றுமை போன்ற மதிப்புகளை கொண்டாடுகிறது. குடும்பத் திரைப்படங்கள் அரிதாக வெளியாகும் காலகட்டத்தில், கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு சரியான நேரத்தில் இப்படம் திரையரங்குகளை அலங்கரிக்கிறது.

அதிரடி காட்சிகள், நகைச்சுவை, உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் பிரம்மாண்ட அனிமேஷன் ஆகியவற்றுடன், ‘மிஷன் சாண்டா’ ஒரு மகிழ்ச்சியான சினிமா விடுமுறை அனுபவத்தை , இந்திய அனிமேஷன் துறைக்கு ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகவும் அமைந்துள்ளது.

Mission santa movie