ஷூட்டிங் ஆரம்பிச்சாச்சு, இன்னும் ஹீரோயின் கெடைக்கல..!!

‘மதுரை வீரன்’ படத்தைத் தொடர்ந்து ‘மித்ரன்’ என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் விஜயகாந்த்தின் மகன் சண்முக பாண்டியன்.

‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ படங்களில் இயக்குனர் சிவாவிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ஜி.பூபாலன் இயக்கும் இப்படத்திற்காக சல சல என்ற துள்ளலான பாடலை படமாக்கியிருக்கிறார்கள்.

இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக வருகிறார் சண்முக பாண்டியன். அவர் லத்தியை சுழற்றி சுழற்றி அடிக்க தோதான வில்லனாக வம்சி கிருஷ்ணா கிடைத்து விட்டார். ஆனால் படப்பிடிப்பு ஆரம்பித்து பல நாட்கள் ஜரூராகப் போய்க்கொண்டிருக்கும் இப்படத்துக்கு இன்னும் ஹீரோயின் மட்டும் அமையவில்லையாம்.

இந்த படத்தின் நாயகியாக நடிக்க பல முன்னணி கதாநாயகிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில் நாயகி யார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் என்கிறது படக்குழு.

MithranMovie NewsShanmuga Pandian
Comments (0)
Add Comment