புரமோஷனுக்காக ஒரு பார்ட்டி சாங் : ‘முப்பரிமாணம்’ படத்தில் குவிந்த 27 நட்சத்திரங்கள்!

‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தைத் தொடர்ந்து சாந்தனு நடிப்பில் ரிலீசுக்கு தயாராகி வரும் படம் தான் முப்பரிமாணம்.

பாலாவின் உதவியாளரான புதியவர் அதிரூபன் இயக்கியிருக்கும் இப்படத்தில் மூன்று விதமான கெட்டப்புகளில் நடிக்கும் சாந்தனுக்கு ஜோடியாக, சிருஷ்டி டாங்கே, நடிக்க படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.

ஏதோ 3டி எபெக்ட்ல டைட்டில் இருக்கே இது என்ன மாதிரியான படம்? இயக்குநரை கேட்டோம்…

நம்முடைய வாழ்க்கையில் சரி, தவறு என இரு விஷயங்கள் இருக்கும். ஆனால், அதையும் தாண்டி மூன்றாவதாக ஒரு விஷயம் இருக்கும். அதனால் ஏற்படும் விளைவுகளை சொல்லும் படம் தான் ‘முப்பரிமாணம்’.

இதுக்கு யாரை மியூசிக் டைரக்டரா போடலாம்னு யோசிச்சப்ப வெற்றிமாறன் சார் தான் ஜி.வி.பிரகாஷ் கரெக்ட்டா இருப்பார்ன்னு சொன்னார். அவர்கிட்ட கதையைச் சொன்னேன். கேட்ட உடனே மியூசிக் போட ஓ.கே சொன்னார். அவர் இருக்கிற பிஸியில நான் கேட்ட மாதிரியே பாடல்களை போட்டுக் கொடுத்தார் என்றார் இயக்குநர் அதிரூபன்.

படத்தில் ஒரு பார்ட்டி சாங் இருக்கிறது. இந்தப் பாடலுக்காக கிட்டத்தட்ட 3 மாத காலம் நேரம் ஒதுக்கி, நிறைய டியூன்களை போட்டு கடைசியில் ஒன்றை தேர்வு செய்தோம்.

இந்தப் பாடலில் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், கே.பாக்யராஜ், பிரபு, பாண்டியராஜன், பார்த்திபன், ராதிகா சரத்குமார், ரம்யா கிருஷ்ணன், பூர்ணிமா பாக்யராஜ், விவேக், ஆர்யா, விஜய் ஆண்டனி, சூரி, பிரசன்னா, நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட 27 நடிகர்களை ஒன்று சேர்த்து இப்பாடலை படத்தின் புரோமோ சாங்க்காக தயார் செய்திருக்கிறார்கள். அதோடு இந்தப்பாடல் படத்திலும் இடம்பெறுகிறதாம். மேலும், இப்படத்தின் பின்னணி இசைக்காகவே 85 நாட்கள் செலவிட்டிருக்கிறார்களாம்.

ரிலீசுக்கு தயார் நிலையில் இருக்கும் இப்படத்துக்கு சென்சாரில் ‘யு’ சான்றிதழ் கிடைத்திருக்கிறது. பிப்ரவரி மாதத்தில் சாந்தனுவின் முப்பரிமாணங்களையும் ரசிகர்கள் திரையில் பார்க்கலாம்.

MupparimanamMupparimanam Movie NewsShanthanusrushti dange
Comments (0)
Add Comment