புதுமுகத்துடன் அடுத்த படத்துக்கு தயாரானார் ‘மிஸ்கின்’

யக்குநர் மிஷ்கின் ‘பிசாசு’ படத்தின் பெரும் வெற்றிக்கு பிறகு ஒரு நடிகராக ‘சவர கத்தி’ படம் மூலம் நடிக்கிறார்.

இதை தொடர்ந்து நவம்பர் மாதம் முதல் அவர் தனது இயக்கத்தில் உருவாக உள்ள அடுத்த படத்தை பற்றி அறிவித்து உள்ளார்.

ட்ரேன்ஸ் வேல்ட் டெலிகம்யூனிகேஷன்ஸ் என்ற புதிய நிறுவனத்தின் மூலம் ரகுநந்தன் தயாரிக்கும் இந்தப் படத்தில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார் புதுமுகம் ஷ்யாம்.

இந்த படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர், நடிகையர், தொழில் நுட்பக் கலைஞர்கள் ஆகியோரின் தேர்வும் நடை பெற்றுக் கொண்டு இருக்கிறது.

‘சவர கத்தி’ படத்தின் இடைவிடாத படப்பிடிப்பின் இடையில் இயக்குநர் மிஷ்கின் தனது புதிய படத்தின் கதையை எழுதிக் கொண்டு இருக்கிறார்.

Mysskin
Comments (0)
Add Comment