யாரும் எதிர்பாராத கூட்டணியோடு ‘நாடக மேடை’ அமைக்கும் ‘துருவங்கள் 16’ இயக்குநர்!

2016ம் ஆண்டில் 100 நாள் ஓடி மாபெரும் வெற்றிப் படமாக அமைந்த படம் ‘துருவங்கள் பதினாறு’. விமர்சன ரீதியிலும், வசூலிலும் பேசப்பட்ட படம் என்ற பெருமையையும் பெற்றது.

இப்படத்தை இயக்கிய கார்த்திக் நரேனின் அடுத்த படம் பற்றிய எதிர்பார்ப்பு கூடியது. தனது அடுத்த படமாக ‘நரகாசுரனை’ இயக்கி உள்ளார் கார்த்திக் நரேன். அரவிந்த்சாமி , ஸ்ரேயா , சந்தீப் கிருஷ்ணா , ஆத்மிகா இப்படத்தில் நடித்துள்ளனர். இதன் இறுதிக்கட்ட தொழில் நுட்பப் பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.

இந்நிலையில் தன் மூன்றாவது படத்தின் அறிவிப்பைத் வெளியிட்டிருக்கிறார் கார்த்திக் நரேன். படத்தின் பெயர் ‘நாடக மேடை ‘. இப்படத்தை தனது ‘நைட் நாஸ்டால்ஜியா பிலிமோடெய்ன்மெண்ட் ‘ பட நிறுவனம் சார்பில் கார்த்திக் நரனே தயாரிக்கிறார்.

ஒளிப்பதிவு – சுஜித் சரங், இசை- ரோன் ஈத்தன் யோகன் , எடிட்டிங் – ஸ்ரீஜித் சரங் , கலை – சிவசங்கர், தயாரிப்பு நிர்வாகம் – மணிகண்டன் என்று தன் பரிவாரங்களுடன் களம் இறங்கும் கார்த்திக் நரேன், நடிப்பவர்கள் யார் யார் என்பதை விரைவில் அறிவிக்கவுள்ளார்.

அது யாரும் எதிர்பாராத யூகிக்க முடியாத நட்த்திரக் கூட்டணியாக இருக்குமாம்.

Karthick NarenNaadaga Medai Movie NewsNaadaga Medai News
Comments (0)
Add Comment