‘நாடோடி கனவு’ : ஒரு ஊரையே காலி செய்ய வைக்கும் காதல் ஜோடியின் கதை

ர்.ஆர்.ஆர். புரொடக்‌ஷன்ஸ் சார்பில் கே.ராஜேந்திரன் தயாரித்திருக்கும் படம் ‘நாடோடி கனவு’.

இதில் நாயகனாக மாஸ்டர் மகேந்திரன் நடித்துள்ளார். நாயகியாக சுப்ரஜா நடித்துள்ளார். மேலும் கிரேன் மனோகர், விஜய் கணேஷ் மற்றும் கே.ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். சபேஷ் முரளி இசையமைத்துள்ள இப்படத்தை வீர செல்வா இயக்கியுள்ளார். ராகுல் இணை தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிஜு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பொதுவாக ஒரு கிராமத்தில் தவறு செய்தவர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பார்கள். அதுபோல் காதலர்களையும் ஊர் மக்கள் ஒதுக்கி வைப்பார்கள். ஆனால், இந்த படத்தில் காதலர்களை ஊரை விட்டு ஒதுக்கி வைக்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதால், ஊர் மக்கள் அனைவரும் ஊரை காலி செய்கிறார்கள். எதற்காக இப்படிப்பட்ட சூழ்நிலை ஏற்பட்டது என்பதை வித்தியாசமான திரைக்கதை மூலம் படத்தை உருவாக்கி இருக்கிறார்கள் படக்குழுவினர்.

இப்படத்தில் இடம்பெறும் ‘கருத்த மச்சான்’ என்ற பாடல் படப்பிடிப்பின் போது, கதாநாயகி சுப்ரஜாவிற்கு விஷப்பூச்சி ஒன்று கடித்து உடல் முழுவதும் அலர்ஜி ஏற்பட்டிருக்கிறது. உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. மருத்துவமனையில் இருந்து திரும்பிய உடனே ஓய்வெடுக்காமல், மீண்டும் படப்பிடிப்பில் கலந்துக் கொண்டு படக்குழுவினரை ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.

படப்பிடிப்பு பரமக்குடி, சிவகங்கை மற்றும் சென்னையில் நடைபெற்றுள்ளது. செப்டம்பர் மாதம் திரைக்கு வரவிருக்கிறது.

MahendranNadodi KanavuNadodi Kanavu Newssubraja
Comments (0)
Add Comment