கணேஷ் ஆச்சார்யாவின் நடனத்தில் உருவாகும் ‘நாக பந்தம்’ பட பாடல்!

நடிகர் விராட் கர்ண் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் அபிஷேக் நாமா இயக்கத்தில் NIK ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கிஷோர் அன்னபுரெட்டி தயாரித்து, அபிஷேக் பிக்சர்ஸ் உடன் இணைந்து வழங்கும் பான் இந்திய திரைப்படமான ‘நாக பந்தம்’ எனும் திரைப்படத்திற்காக நடன இயக்குநர் கணேஷ் ஆச்சார்யாவின் நடன அசைவுகளில் நாயகன் விராட் கர்ண் மற்றும் நடிகைகள் நபா நடேஷ் மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் பங்கேற்ற அற்புதமான பாடலை படக் குழுவினர் படமாக்கி வருகிறார்கள்.

இளம் நாயகன் விராட் கர்ண் – பெரும் எதிர்பார்ப்புடன் தயாராகி வரும் ‘நாக பந்தம்’ எனும் திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த திரைப்படத்தை அபிஷேக் நாமா பிரம்மாண்டமாக  இயக்கி வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும் பரபரப்பையும், வரவேற்பையும் பெற்றுள்ளது.

இந்நிலையில் நானக்ராம்குடா ராமாநாயுடு ஸ்டுடியோவில் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இதில் நாயகன் விராட் கர்ண்,  நடிகைகள் நபா நடேஷ் மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் கலந்து கொள்ளும் பிரம்மாண்டமான பாடலை படமாக்கி வருகின்றனர். இதற்காக ஏராளமான பொருட்செலவில் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இசையமைப்பாளர் அபே ஒரு பிளாக் பஸ்டர் ஹிட் பாடலுக்கு இசையமைத்துள்ளார். இந்த பாடலில் பின்னணி பாடகர்களான காலா பைரவா – அனுராக் குல்கர்னி மற்றும் மங்லி ஆகியோரின் துடிப்பான குரல்கள் இடம் பிடித்திருக்கிறது. பாடலாசிரியர் காசர்லா ஷ்யாம் அற்புதமான பாடல் வரிகளை எழுதியுள்ளார்.

இந்தப் பாடலுக்கு மாஸ்டர் கணேஷ் ஆச்சார்யாவின் நடன அசைவுகள் சிறப்பாக இருக்கும். இதனால் படத்தில் இடம்பெறும் நடன காட்சிகள் ரசிகர்களை வசீகரிக்கும் என உறுதியளிக்கிறது.

‘தி சீக்ரெட் ட்ரெஷர் ‘ எனும் வாசகத்துடன் ‘நாக பந்தம்’ ஒரு சாகச காவிய படைப்பாக தயாராகி வருகிறது. அபிஷேக் நாமா கதை மற்றும் திரைக்கதை என இரண்டிலும் தன்னுடைய தனித்துவமான திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். தயாரிப்பாளர் கிஷோர் அன்னபுரெட்டி இந்த திரைப்படத்தை NIK ஸ்டுடியோஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். மேலும் இந்த திரைப்படத்தை லட்சுமி ஐரா மற்றும் தேவன்ஷ் நாமா ஆகியோர் பெருமையுடன் வழங்குகிறார்கள்.

‘நாக பந்தம்’ 2025 ஆம் ஆண்டில் தமிழ் , தெலுங்கு,  இந்தி,  மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கிறது.

Nagabandham movie