புதுமுகங்கள் நடிப்பில் சை-பை த்ரில்லராக தயாராகும் ‘நகல்’!

திரைப்பட இயக்குநர்கள் பல்வேறு புதுமையான கோணத்தில் திரைப்படங்களை உருவாக்கி வருகிறார்கள். அப்படி புதுமையான கதையம்சங்களுடன் வரும் படங்கள் பல உள்ளன. அதில் மிகவும் விறுவிறுப்பான சை-பை படமாக உருவாகவுள்ளது இந்த “நகல்” திரைப்படம்.

எஸ் டு எஸ் பிக்சர்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர். கிருஷ்ணா மோகன் இயக்கத்தில், சிவசக்தி நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘நகல்’.

இப்படத்தில் ‘சிவசக்தி’ கதாநாயகனாகவும். மும்பை மாடல் ‘ரிஷ்மா’ நாயகியாகவும் நடித்துள்ளனர். இவர் பல குறும்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கதை மற்றும் திரைக்கதை சதுர்த்தி ஐயப்பன், எப்.எஸ். பைசல் இசையில், ஜோன்ஸ் ஆனந்தன் ஒளிப்பதிவில் உருவாகவுள்ள இப்படத்துக்கு ஸ்டன் சிவா ஸ்டன்ட், மணிவர்மா மற்றும் ஷரன் சந்தரம் ஆகியோர் கலையை கவனிக்கின்றனர்.

சை-பை த்ரில்லராக உருவாகவுள்ள இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க தமிழின் முன்னனி நடிகர்கள் பலரிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

ஜுலை 9ஆம் தேதி இப்படத்தின் படபிடிப்பு துவங்கி 40 நாட்கள் தொடர்ந்து நடைபெறவுள்ளது. படத்தின் 75% படபிடிப்பு சென்னையிலும், மீதம் உள்ள படபிடிப்பு வெளிநாடுகளிலும் உருவாகவுள்ளது. மெடிக்கல் ரீதியான காட்சிகளை வெளிநாடுகளில் படமாக்கவுள்ளனர் குழுவினர். பாடல்கள் ஊட்டியில் உருவாகவுள்ளது.

இயக்குனர் சுப்பிரமணிய சிவா மற்றும் நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி நட்ராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு திரைப்பட துவக்க விழாவை சிறப்பித்தனர்.

NagalNagal Movie LaunchNagal Movie News
Comments (0)
Add Comment