நான் ஒரு அப்பா என்பதை காலம் உணர்த்திக்கொண்டே இருக்கிறது- சேரன்

பிக்பாஸ் முடிந்து சேரனுக்கு முதல்படமாக வரவிருக்கிறது ராஜாவுக்கு செக். மழை படத்தை இயக்கிய சாய் ராஜ்குமார் இப்படத்தை இயக்கி இருக்கிறார்.

இப்படத்தை SDC பிக்சர்ஸ் உலகமெங்கும் வெளியீடுகிறது. இப்படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. விழாவில் கலந்துகொண்டு
இயக்குநரும் நடிகருமான சேரன் பேசியதாவது,

“ராஜாவுக்கு செக் படத்தில் அப்பாவாக நடித்திருக்கிறேன். காலம் நான் ஒரு அப்பா என்பதை அவ்வப்போது உணர்த்திக் கொண்டே இருக்கிறது. இந்தத் திரைப்படத்தில் என்னைத் தவிர மிக அத்தனைப் பேரும் மிக அதிகமாக உழைத்திருக்கிறார்கள்.
இப்படத்தின் இயக்குநர் உள்பட பலரும்
ஒரு அங்கீகாரத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். நிச்சயம் அந்த அங்கீகாரம் கிடைக்கும். நான் படத்தைப் பார்த்துவிட்டேன். உங்கள் வீட்டில் பெண் குழந்தை இருந்தால் நிச்சயம் அந்தக்குழந்தைகளோடு வந்து படத்தைப் பார்க்க வேண்டும். என் நண்பர் எம்.எஸ் பிரபு கதைக்குள் அடங்குகிற கேமராமேன் அவர். அவர் இப்படத்தின் அசோஸியட் டைரக்டர் போல வேலை செய்துள்ளார். இப்படத்திற்கு தியேட்டர்கள் சரியாக கிடைக்க வேண்டும். இப்படத்தைப் பார்த்ததும் நம் உறவுகளின் கையைப் பிடிப்பதைப் போல் உணர்வீர்கள்” என்றார்

Comments (0)
Add Comment